உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகிக் கதை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது38

கண்ணகி கதை

தூயவரே நுந்தமக்குச் சொல்லும்வகை ஒன்றறியோம் முன்னோர்கள் தந்தபொருள் மூடமதி யால்இழந்தேன் பொன்னெல்லாம் போனபின்னர்ப் பத்தறிவு தானடைந்தேன் இழந்தபொருள தானீட்டஎழின் மதுரைநோக்கியிட்டோம் என்றுசொல்லக் கேட்டதவக் கவுந்தியவள் நன்றென்றாள் நின்னொளிரும் மாமதுரை நீண்ட தூரத்திலன்றோ ! மடக்கொடி மாதிவளும் கடக்கவும் முடியுமோதான்! கடக்கும்வழி முட்களும் கற்களும் நலியுமையா ! பாண்டியன் மதுரைநகர் ஈண்டிய அறிஞர்களின் காண்டரும் அறவுரைகள் கேட்டிடும் விருப்புடையேன் ஆதலின் உங்களுடன் அணிமதுரை உற்றிடுவேன் காதலின் மாதிவட்குத் தீதில்துணை யாயிருப்பேன் என்றுசொலி மூவருமே இயலும்வழி கடக்கலுற்றார் அன்றுமுதல் நாள்தோறும் காதமொன்றுகடக்கலுற்றார் காவிரி வளங்கொழிக்கும் காராளர் ஏர்செழிக்கும் காமலர்கள் தேன்துளிக்கும் தாமரைக் குளங்களிக்கும் பார்வளம் கண்டுகொண்டே சீரங்கம் தானடைந்தார் சாரணர்கள் அங்குவந்தார் தாளினை வணங்கிநின்றார் படகினில் ஏறிவந்தார் பழகுகா விரிகடந்தார் இடமகல் தென்கரையை அடைந்தொரு சோலைகண்டார் அப்பொழில் இருக்கும்வேளை அரிவையொடு தூர்த்தனவன் ஒப்புறவே அங்குவந்தான் உத்தமர் இவரைக்கண்டான்.

வசனம்

காவிரியின் தென்கரை அடைந்த கோவலனும் கண்ணகியும் குளிர்தவப்பெண் கவுந்தியும் உறையூரின் புறத்துள்ள ஒருசோலையில் தங்கினார்கள். அங்குவந்த வம்பப்பரத்தையும் வறுமொழியாளனாகிய தூர்த்தனும் இளமைநலம் கமழும் இன்பக் காதலரைக்கண்டு,மதனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/37&oldid=1296528" இலிருந்து மீள்விக்கப்பட்டது