பக்கம்:கண்ணகி தேவி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி தேவி

23

யடிகளையும் இருக்கும்படி செய்து கோவலன் காலைக் கடன் கழித்தற்கு ஒரு பொய்கையை அடைந்தான்.

கோவலன் இங்ஙனம் பொய்கைக்கண் நிற்கும் போது, கண்ணகியோடு அவன் வேற்றுாருக்குப்புறப்பட்ட செய்தி கேட்ட மாதவி துயர் கொண்டு எழுதிக்கொடுத்த ஒலையை வாங்கிக்கொண்டு புகாரினின்றும் புறப்பட்டுக் கோவலனைத் தேடித்திரியும் கௌசிகன் என்னும் மறையோனும் அப்பொய்கை வந்து சேர்ந்தனன்; கோவலன் வழி நடந்த வருத்தத்தாலும் மனைவியுடன் கானகம் வந்த கவற்சியாலும் உருவம் வேறுபட்டிருந்தபடியால், கெளசிகன் அவனேச்சந்தேகித்து ஓர் உபாயத்தால் இன்னனெனத் துணியக் கருதினான்; கருதியவன் கரையில் படர்ந்திருக்கும் மாதவியென்னும் மறுபெயருடைய குருக்கத்தி நிழலிற்போய் நின்று அதனை நோக்கி,

கோவலன் பிரியக் கொடுந்துய ரெய்திய
மாமலர் நெடுங்கண் மாதவி போன்றிவ்
வருந்திறல் வேனிற் கலர்களைத் துடனே
வருந்தினை போலும் மாதவி!” என்று

இந்த மாதவியை அந்த மாதவியுடன் உவமித்துப்பேசி நின்றான். அது கேட்ட கோவலன் “ஐய! நீ கூறிய இக்கூற்றிற்குப் பொருள் யாதோ?” என்று வினவினான். உடனே கெளசிகன், “என் ஐயம் அகன்றது; கோவலனைக் கண்டேன்!” என உவகை பூத்து, அவனைக்கிட்டி, “சீரிய செல்வ, உனது பிரிவால் உன் தந்தையும் தாயும் அருமணியிழந்த நாகம்போலத் தவிக்கின்றார்கள்; சுற்றத்தார் யாவரும் உயிரிழந்த உடம்பு போலத் துயர்க்கடலுளுணர்வற்றுக் கிடக்கின்றனர்; உன் ஏவலாளர் யாவரும் உன்னைத் தேடித் திசை திசைக்குச் சென்றிருக்கின்றனர்; பூம்புகார் நகரம் முழுதும் இராமனைப்பிரிந்த அயோத்திபோலச் செய-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/31&oldid=1411050" இலிருந்து மீள்விக்கப்பட்டது