பக்கம்:கண்ணகி தேவி.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி தேவி

33

முனிவர் உண்ட உணவின் எச்சிலை உண்டு, அவர் கை கழுவிய நீரைப் பருகிப் பசி தணிந்து, தனது நன்றியை முனிவர்க்குக் காட்டுவது போல, அவர் முகத்தைக் கனிவுடன் பார்த்துக்கொண்டிருந்தது. அதனைக் கண்டு இரக்கங்கொண்ட அம்முனிவர், சாயலன் மனைவியை நோக்கி, 'உத்தமியே, இதனைக் குரங்கென்று கருதாது உன் பின்ளைகளிலொன்றாகப் பாதுகாத்து வருவாயாக,' என்று கூறிக் குரங்கை ஒப்பித்தார். அவளும் அந்நாள் முதல் அதனைப் பிள்ளையாகப் பாவித்து வளர்த்து இதற்கென்று தன் பொருளில் ஒரு பாகமும் ஒதுக்கி வைத்தாள். சின்னாளின் பின்னர்க் குரங்கு மரித்துவிட, சாயலன் மனைவி அதற்கென்று பிரித்து வைத்த பொருளையெல்லாம் 'இதற்கு இக்குரங்காம் இழிபிறப்பு ஒழிக,' என்று சொல்லித் தானம் செய்தாள். அத்தானப் பயனால் அக்குரங்கு மத்திம தேசத்தில் வாரணவாசி என்னும் நகரத்தில் உத்தரகௌத்தன் என்னும் அரசனுக்கு அறிவும் உருவும் திருவும் நிரம்பிய மகனாய்ப் பிறந்தது. பிறந்த மகன் பருவமுடையவனாய்த் திருமுடிகவித்து முப்பத்திரண்டு வருடம் செங்கோலோச்சி விளங்கி இறந்தான். இவன் அரசனாய் விளங்கிய காலத்துச் செய்த அரிய தானத்தின் பயனால் இத்தெய்வ யாக்கை பெற்றான். இவன் சாவக நோன்பிகளான உங்கட்கெல்லாம், 'சாயலன் மனைவி தானத்தின் பலனாலே நான் இத்தன்மையன் ஆனேன்', என்பதனை அறிவிக்கவே இத்தேவ வடிவத்திற்கலங்த குரங்குக் கையுடன் வந்துள்ளான்,' என்று அவர்களுக்கு விளங்க உரைத்தான்,' என்று கூறி, 'மாதரி, நேரமாகின்றது. இவர்களை அழைத்துச் செல்,” என்று வேண்டிக்கொண்டாள்.

மாதரி, மகிழ்ச்சியுடன் அதற்குடன் பட்டுக் கண்ணகியையும் கோவலனையும் அழைத்துக்கொண்டு, 3