பக்கம்:கண்ணகி தேவி.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணகி தேவி

39

பொற்கொல்லன், தான் எண்ணிய எண்ணம் முடிந்ததென்று தனக்குள் மகிழ்ந்து, காவலாளருடன் தீவினை வலையில் அகப்பட்டிருந்த கோவலன் இருக்குமிடத்தை விரைவில் வந்தடைந்தான். பின்பு அவன், கோவலனுக்குக் காவலாளிகளைக் காட்டி, "இவர்கள் வேந்தன் விருப்பப்படி சிலம்பு பார்க்க வந்தவர்கள்." என்று சொல்லிச் சிலம்பைக்காட்டுவித்துக் காவலாளிகளைத் தனித்தழைத்துச் சிலம்பின் அருமைபெருமைகளைக் கூறுவான்போல 'இவன் வைத்திருக்கும் சிலப்பு தேவியின் சிலம்பு என்பதற்குச் சிறிதும் ஐயமில்லை. ஆகையால், நீங்கள் வந்த காரியத்தைவிரைந்து செய்யுங்கள்." என்று தூண்டினான். கொல்லன் வார்த்தைகளைக்கேட்ட அவர்கள், கோவலனது முகத்தின் அழகையும் உடல் இலக்கணத்தையும் சாந்தமான குணத்தையும் அவன் இருந்த இருப்பையும் உற்று கோக்கி, "இவன் கள்வன் அல்லன்; இவனைக்கொல்லுதல் அந்தோ! பெரும்பாவம்!" என்றனர். கொல்லன் அவர்களைப் பார்த்து வஞ்சநகை நகைத்து, அவர்கள் மனம் உடன்படும்படி களவு நூலின் துறைகளையெல்லாம் எடுத்துக்கூறி, அவற்றில் பழகிய கள்வர் சாமர்த்தியங்களையும் விரித்துப் புலப்படுத்தி, தான் கூறியவையெல்லாம் உறுதி பெறுவதற்கு, நடவாத நிகழ்ச்சியொன்றை நடந்ததாகப் புனைந்து கூறத் தொடங்கினான் :

"வேலேந்திய வீரர்களே, திருடரின் திறமையை நீவிர் அறியீர் போலும்! நான் சொல்வதைக் கேளுங்கள்: பொல்லாத அந்தக்கள்வர்களுக்கு மந்திரம்,தெய்வம், மருந்து, நிமித்தம், தந்திரம், இடம், காலம், ஆயுதம் ஆகிய இந்த எட்டுமே துணை. இந்தக் கள்வனை அரசன் ஆணைப்படி அழியாது இவனது மருந்து வசப்படுவீர்களாயின், அரசன் தண்டம் உங்களுக்குத் தவறாது. கள்வர் மந்திரத்தை அபிமந்திரிப்பாராயின்,