பக்கம்:கண்ணகி தேவி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

கண்ணகி தேவி

பொறுத்தல் உமது கடன்," என்று சொல்லி, அவன் வாழும் ஊராகிய திருத்தங்காலோடு வயலுரையும் அவனுக்கு மானியமாகக் கொடுத்து வணங்கி அனுப்பினான். அவ்வளவில் துர்க்கை கோயிற்கதவு ஊரெல்லாம் ஒசை கேட்கத் தானே திறந்தது, உடனே சிறைக்கூடத்திலுள்ளாரைச் சிறையினின்றும் விடு மின்; வரிகளை வாங்காது விடுமின்; பிறர் கொடுத்த பொருளாயினும், புதையற்பொருளாயினும் பெற்றவர்க்கும் எடுத்தவர்க்குமே உரியதாகும், என்றுபறை யறைவித்து அரசநீதியை அறிவித்தவன் இப் பாண்டியன்.

“இப்பாண்டியனது அரசமுறை மிகச்சிறந்தது. மேலும் இத்தகைய அரசனும் இந்நகரும் ஆடித்திங்கள், கிருட்டிண பக்கம், பரணியோடு சேர்ந்த கார்த்திகை நட்சத்திரம், வெள்ளி வாரம் இவை சேர்ந்த தினத்தில் தீயால் அழியுமென்று முன்னரே சோதிட வார்த்தையும் உண்டு ; அது தவருதன்றோ! உன்கணவனுக்கு இத் துன்பம் உண்டாதற்குக் காரணமா யிருந்த ஊழ்வினையை உரைக்கின்றேன்; கேள் :

"கலிங்க நாட்டில் சிங்கபுரத்தரசன் வசு என்பவனும், கபிலபுரத்தரசன் குமரன் என்பவனும் தாயாதிகள். ஆதலின், தம்முள் பகைமை கொண்டு தங்கள் நகர்க்கு இடையிலுள்ள ஆறுகாத துாரம் அளவும் பெரும்போர் செய்தனர். அவ்வழியாகச் சென்று பொருள் தேட விரும்பிய சங்கமன் என்பவன் மாறு வேடம் பூண்டு, பண்டங்களைச் சுமந்து போய், தன் மனைவியுடன் சிங்கபுரத்துக் கடைவீதியில் அவைகளை விற்றுக்கொண்டிருந்தான். அரசன் சேவகனான பரதன் என்பவன், அவன்மீது கொண்ட பகைமை காரணமாக அவனைப் பகை அரசனுடைய ஒற்றன்' என்று பிடித்துக்கொண்டுபோய், அரசனுக்குக் காட்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/62&oldid=1410989" இலிருந்து மீள்விக்கப்பட்டது