கண்ணகி தேவி
55
டிக் கொலை செய்துவிட்டான். கொலையுண்டிறந்த சங்கமன் மனைவி நீலி என்பவள், மிக்க துயரமுற்று, பலவாறு முறையிட்டுப் பதினான்கு நாள் பலவிடத்தும் சென்று அழுதரற்றி, ஒரு மலைமீதேறி வீழ்த்து உயிர் துறந்து கணவனை மறுமையில் கூடுதற்கு நினைந்தவள், 'எமக்கு இத்துயர் செய்தோர் மறு பிறப்பில் தாமும் இத்துன்பமே அடைவார்களாக!” என்று சாபமிட்டு, மலையினின்றும் வீழ்ந்திறந்தாள். அப்பரதனே பின்பு கோவலனாகப் பிறந்தான். அவள் இட்ட சாயம் கிட்டியதாகலின், நீங்கள் இத்துன்பம் உற்றீர்கள்,
'உம்மை வினேவந் துருத்த காலைச்
செம்மை யில்லோர்க்குச் செய்தவம் உதவாது.'
கண்ணகீ, இற்றைக்குப் பதினான்காம் நாளின் மாலைப் பொழுதில் நீ உன் கணவனைத் தேவவடிவிற் கண்டு, அவனோடு சுவர்க்கம் புகுவாய்,' என்று இவ்வாறு உரைத்து மதுராபதித் தெய்வம் கண்ணகியைத் தேற்றி, நகரின் தீயைத் தணிப்பித்துச் சென்றது. கண்ணகியும் மதுரை விட்டு நீங்கக் கருதினாள்.
மதுரையை விட்டுப்புறப்படக்கருதிய கண்ணகி, துர்க்கை கோயில் வாசலிலே தன்னுடைய கைவளையைத் தகர்த்து உடைத்துவிட்டு, "கீழ்த்திசை வாயிலின் வழியாகக் கணவரோடு மதுரையில் வந்த நான், இப்போது தமியேனாய் மேல்திசை வாயிலின் வழியாகப் போகின்றேன் ! இனி என் கணவரைக் கானும் அளவும் ஓரிடத்தும் இருத்தலும் இரேன் ! நிற்றலும் நில்லேன்' என்றுகூறி, இரவுபகல் ஒயாது வையைக் கரையை வழியாகக் கொண்டு மேடென்றும் கிடங்கென்றும் பாராமல், மேற்குத் திசையை கோக்கிப் புறப்பட்டாள்.