பக்கம்:கண்ணகி தேவி.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

கண்ணகி தேவி

பாண்டி நாடு, அன்று தொட்டு மழையின்றி வறுமையெய்தி, வெப்பு நோயும் குருவும் முதலாகிய; பல வகை நோய்க்கும் இடமானது. பின்பு கொற்கை நகரிலிருந்த வெற்றிவேற்செழியன் என்னும் இளஞ் செழியன் வந்து, அரியாசனம் ஏறிப் பொற்கொல்லர் ஆயிரம்பேரைப் பலியிட்டுக் களவேள்வியால் சாந்தி செய்து, கண்ணகியை வழிபட்டு விழாச் செய்தான். அது முதல் பாண்டி நாடு செழித்தது.

வையை வழிக்கொண்ட கண்ணகி, மலைநாட்டில் திருச்செங்குன்று என்னும் மலைமீது ஏறி, ஒரு வேங்கை மரத்து நிழலில் நின்றாள். மலையில் வாழும் குறத்தியர் அவளைக் கண்டு,"அம்மையீர், எங்கள் வள்ளியம்மையைப்போலக் காணப்படுகிறீர்; நீர் யாரோ?” என்றார்கள். அவள், "யான் ஊழ்வலியாலே, மதுரை நகரும் பாண்டியனும் கேடுற அந்நகரில் கணவரை இழந்துவந்த கடும்பாவி” என்றாள்; பின்னர், மதுரா, பதித் தெய்வம் உரைத்தபடி பதினான்காம் நாள் மாலையில் தெய்வ வடிவத்தோடு வந்த கோவலனைக்கண்டு, களிகூர்ந்து, அவனுடன் தேவ விமானத்தில் ஏறினாள் கண்ணகி. தேவர்கள் பூமழை பொழிந்து இருவரையும் எதிர் வந்து அழைத்துப் போயினர். கண்ணகி இவ்விதம் கணவனேடு விமானம் ஏறிச் சுவர்க்கம் புகுந்ததைக் கண்ட குறத்தியரும், குறவர்களும் மிக்க ஆச்சரியமுற்று, இங்கு வந்து நின்ற மாது நம் குலத்துக்கே ஒரு பெருந்தெய்வம். "இவள்பொருட்டு நாம் குரவையாடிக் கொண்டாடுவோம்” என்று துணிந்து, தம் இனத்தவரையெல்லாம் அழைத்து, "சிறு குடியீரே, சிறுகுடியீரே, இப்பறம்பின் தாழ்வரையில் வேங்கைமர நிழலில் இவளுக்குக் கோயில் எடுங்கள். குன்றின் வளம் குன்றாது பெருகுதற்கு இங்கங்கைக்குத் தொண்டகம், சிறு பறை கொட்டுமின் ; கொம்பை ஊதுங்கள்; கொடுமணி ஆட்டுங்கள் ; குறிஞ்சிப் பண்