பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 2. K) ராசீ வாணாசூரனின் நகரமான சோணிதபுரத்தை முற்றுகை யிட்டனர். சிவன் தந்த வரங்களும் அவன் பாதுகாப்பும் வாணாசூரனுக்குப் புகலிடம் தந்தன; எனினும், கண்ணன் முன் சிவனும் அவன் கணத்தவரும் நின்று தாக்குதலை மெல்ல நெகிழ்த்துக்கொண்டனர். சிவனின் வேண்டு கோளின்படி அவன் நான்கு கரங்களைமட்டும் விட்டு விட்டுக் கண்ணன் அவனை உயிரோடு தப்ப இசைவு தந்தான்.

அவனுக்கு ஆயிரம் தோள்கள் இருந்தன. அதனால், அவன் ஆற்றல் மிக்கவனாய் விளங்கினான். மேலும் சிவன் அவனுக்கு எப்பொழுதும் அரணாய் இருந்து காப்பதாயும் உறுதி தந்திருந்தான். அவன் சிவபக்தனாய் இருந்ததால் இந்தப் பாதுகாப்பு அவனுக்குக் கிடைத்தது. அவன் விட்ட அம்புகளை எல்லாம் கண்ணன் மாற்று அம்புகளால் அடக்கி ஒழித்தான். இனி வேறு வழியின்றித் தன் கையில் உள்ள சக்கரத்தை ஏவத் துணிந்தபோது சிவன் கண்ணன் முன் வந்து, அவனுக்காகப் பரிந்து பேசினார்; அவனுக்குத் தான் அபயம் அளித்ததால் அவன் உயிருக்கு இறுதி தேட வேண்டா என்று கேட்டுக் கொண்டார். அவர் வார்த்தையைக் காக்கும் பொருட்டு அவனைக் கொல்லாமல் விடவேண்டியது ஆயிற்று. அவன் ஆயிரம் தோள்களில் நான்கு தோள்கள் மட்டுமே நிலைத்தன. அவனும் கண்ணனை வணங்கித் தன்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டான்.

கருடன் முன் வாணன் ஏவிய நாக அத்திரங்கள் நிற்க முடியாமல் தாமாய் அவிழ்ந்து அதிருததனை விட்டு நீங்கின; அநிருத்தன் விடுவிக்கப்பட்டான். கண்ணன் அதிருத்தனையும் உஷையையும் துவாரகைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தான்.