பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116◇ ராசீ



சுதாமன் என்ற மற்றொரு பெயர் அவருக்கு உண்டு. பொருள்மீது வேட்கையின்றி இறைவன் அருள்மீது நாட்டம் கொண்டு வாழ்ந்தார். அவருக்கு நிறைய பிள்ளைகள்; மனைவி பொறுமை மிக்கவள்; வறுமையால் வாடினர். இக் குழந்தைகளின் பசிக் கொடுமை தாங்கமாட்டாமல் அவர் மனைவியார் அவரை அவர் நண்பனான கண்ணன் செல்வ நிலையில் இருப்பதால், அவனைப் பார்த்து ஏதாவது கேட்டுப் பெற்றுவரும்படி தூண்டினாள்.
நண்பனைப் பொருள் கேட்பது இழிவு என்பதால் முதலில் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. எனினும், அவனைப் பார்க்கும் ஒருவாய்ப்புக் கிடைப்பதால் பின்னர் ஒப்புக்கொண்டார்.
வெறுங்கையோடு போவது சரியன்று என்பதால் தம் மனைவி இடித்துத் தந்த அவல் அரிசியை ஒருசிறு துணியில் கட்டிக்கொண்டு போனார். இந்த ஏழை எளிய பிராமண முதியவரைக் கண்டு இரக்கம் காரணமாய் அவரை உள்ளே அனுமதித்தனர். கண்ணன் பக்கத்தில் ருக்குமணி இருந்தாள். கண்ணன் முகமலர்ச்சியைக் கண்டு வியந்தாள். பழைய நட்புபற்றியும் ஆசிரியரோடு அவர்கள் பழகிய செய்திகளைப் பற்றியும் பேசினர்.
தனக்குத் தின்ன என்ன கொண்டு வந்திருக்கிறார் என்று பார்த்தான். அவர் 'தான் கொண்டு வந்தது ஒன்றும் இல்லை' என்று கூறினார்; 'அவல் அரிசி என்று சொல்வதற்கு வெட்கப்பட்டார்.

"அந்த முடிச்சு என்ன?" என்றான்.