பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 ( ராசீ ___________________________________________

புதியளாய் ஒருத்தியை மணம் செய்து கொள்பவன் என்ன சொல்கிறான்? "பழையவளும் இருந்து போகட்டுமே: பயன்படுவாள்" என்று கூறுவான்; அது போன்ற நிலைதான் கோகுலத்துக்கு ஏற்பட்டது.

பாடியில் புதுவீடுகள் அமைத்துக்கொண்டு பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் கொட்டில்களைக் கட்டிக் கொண்டு சகல வசதிகளையும் ஏற்படுத்திக்கொண்டு குடி பெயர்ந்தனர். மூட்டை முடிச்சுகளை வண்டிகளில் போட்டுக்கொண்டு அவர்கள் வழிப்பயணம் செய்தது வாழ் நாளில் மறக்க முடியாத காட்சியாக இருந்தது. குட்டிக் கண்ணன் பிருந்தாவனம் போவதில் மகிழ்ச்சி காட்டினான்.

அங்கே என்ன என்ன பார்க்கலாம் என்று கேட்டான். உயிரியல் காட்சிக்குச் செல்லும் சிறுவர்கள் கேட்பது போல் அந்த வினாக்கள் இருந்தன.

"யமுனை நதிக் கரையில் விளையாடலாம்; மலைச் சாரலில் கன்றுகளை மேய்க்கலாம்; நீ உன் விருப்பப்படி குழல் ஊதி மகிழலாம். இராதையும் உன்னோடு அங்கு வந்து விளையாடுவாள்” என்று கூறினர்.

இராதையும் அவர்கள் குடும்பமும் அங்கே வருவது அவனுக்கு குதூகலத்தைத் தந்தது. தன் பெண் சிநேகிதி அவள் உடன் வருகின்றாள் என்பதால் அவன் உற்சாகத்தோடு இருந்தான். மற்றும் அவன் பழகிய சிறுமிகள் வீட்டோடு இருந்தனர். அவர்களும் வெளியில் விளையாடுதற்குப் பரந்த இடம் கிடைத்தது. தன் தோழமைச் சிறுவர்களும் இதை வரவேற்று ஆரவாரித்தனர்.

யமுனை நதியின் கரையோரம் கண்ணனின் பூங்குழல் ஒசையைக் கேட்கக் காத்திருந்தது. மலை அவன் வருகைக் காகப் பொறுமையாக நின்று கொண்டிருந்தது. பசுமை யான சோலைகள் எல்லாம் அவனுக்கு நிழல் தருதற்காகச்