பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇29



செழித்து வளர்ந்தன. மயில்களும்,குயில்களும் இவர்களை வரவேற்கக் காத்து இருந்தன.

வத்சவனும் பகனும்

"காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது” என்பார்கள் சிலர். அதுபோல இடம் பெயர்ந்தாலும் அசுரர்கள் வருதலைத் தடை செய்ய இயலவில்லை.முன்னிலும் வலிமை மிக்கவர்கள் தொடர்ந்துதுயர்விளைவித்தார்கள்.

கண்ணன் கன்றுகளின்பின் காலை புறப்படுகிறவன் மாலை கதிரவன் ஒளி மங்கும் முன் வீடு வந்து சேர்ந்தான். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் சிலர் துள்ளிக்கொண்டு போதலும் உண்டு; சிலர் அழுது கொண்டே வீடு திரும்புதலும் உண்டு; இங்கே அவனைக் கல்லும் முள்ளும் நிறைந்த கானகத்திற்கு அனுப்பி வைத்ததற்காக யசோதை கலங்கினாள்.

“இங்கே சிறுமியர் இழைக்கும் சிற்றில் சிதைக்கின்றாய்' என்ற செய்தி செவி கொடுத்துக் கேட்டேன். அதனால் உன்னை வெளியே அனுப்பினேன்; உரிமையோடு நீ வெண்ணெய் அள்ளித் தின்றால் கொள்ளிக் கண் உடைய கள்ளிகள் சிலர், உன்னைக் கள்வன் என்று கருதுகின்றார்களே என்று உன்னை அனுப்பினேன்."

"இங்கே இந்தத் தொல்லைகள் எல்லாம் இல்லாமல் எல்லை கடந்து இருப்பாய் என்று உன்னைக் கன்றின் பின் போக்கினேன். குடையும் இல்லை. காலுக்குச் செருப்பும் இல்லை. கற்கள் நிறைந்த காட்டிலும் முட்கள் நிறைந்த புதரிலும் உன்னை அனுப்பி விட்டு இங்கு வேதனைப் படுகிறேன்" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.