பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 ◇ ராசீ


இரக்கம் கொண்டு நீர் இந்த உதவியைச் செய்ய வேண்டும்" என்று கூறினான்.

அதற்கு அவர் மறுக்கவில்லை. "விதி வலிமையானது: இஃது எப்படி முடியும்? என்று கூற முடியாது. நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்; நம் செயலால் ஆவது ஒன்றும் இல்லை; என்ன நடக்க வேண்டுமோ அது நடந்துதான் தீரும். என் நண்பன் என்பதால் நீ சொல்லுகிறபடி அவர்களை இங்கு அழைத்து வருகிறேன்" என்று கூறினார்.

அவர்களை அழைத்து வர அழகான தேர் ஒன்று சிங்காரித்து அனுப்பினான். அவரும் அத்தேரில் ஏறிக்கொண்டு பிருந்தாவனம் சென்றார்.

கேசியின் மரணம்

கேசி என்ற அசுரனையும் வியோமாசூரன் என்ற அவன் தோழனையும் இறுதி முயற்சியாகக் கம்சன் அனுப்பி வைத்தான். கேசி அதிகாலையில் பிருந்தாவனம் வந்து சேர்ந்தான்; அவன் குதிரை வடிவில் வந்து ஊரையே அதிர வைத்தான். செய்தி தெரிந்து வந்த கண்ணன் அதன் சேணத்தை இறுகப் பிடித்துக்கொண்டு அதன் வாயில் தனது இடக் கையை விட்டுக் கழுத்தை நெறித்து விட்டான். அது திக்குமுக்கு ஆடிக் கால்களை உதைத்துக் கொண்டு உயிரைக் கக்கி உடலைக் கீழே போட்டது.

கண்ணன் வழக்கம்போல் அன்று காலை தன் தோழர்களுடனும் கன்றுகளுடனும் கோவர்த்தனமலைச் சாரலுக்குச் சென்றான். அங்கு அவர்கள் பல்வகை விளையாட்டுகள் விளையாடிக் கொண்டிருந்தனர். திருடன் விளையாட்டு விளையாடிக் கொண்டு தாமே ஒளிந்து கொண்டும் கன்றுகளை ஒளித்து வைத்தும் 'எடுபிடி'