பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 О упе எல்லாம் பக்கத்தில் இருந்த தூண் ஒன்றனைக்கொண்டு அடித்து நொறுக்கினான். தம் மைத்துனனைப் பலராமன் கொன்றுவிட்டது குறித்துக் கண்ணன் ஏதும் பேசவில்லை; பாராட்டினாலும் ருக்குமணியின் முகம் கோணும் என்பதால் எதுவும் பேசாமல் கண்ணன் அடங்கிவிட்டான். சியாமந்தகமணியின் கதை துவாரகைக்கு அருகே கடற்கரையைச் சார்ந்த ஒரு சிற்றுாரில் சத்திரஜித்து என்பவன் இருந்தான். அவன் கடற்கரையில் இருந்து கொண்டு மிக்க பத்தியோடு சூரியனை வழிபட்டுத் துதித்தான். அவனுடைய புகழ்ச்சிக்குச் சூரியன் மெச்சி அவனுக்கு எதிரே வந்து காட்சி அளித்தான். ஒளிவடிவமாக வந்த அந்தத் தெய்வ மகனை வணங்கினான். 'என்னிடம் நீ என்ன எதிர்பார்க்கிறாய்? என்ன வேண்டும்?” என்று அத்தெய்வ மகனாகிய சூரியன் கேட்டான். சூரியன் கழுத்தில் அணிந்து கொண்டிருந்த ஒளிமிக்க சியாமந்தகமணியைத் தனக்குத் தரும்படி கேட்டான். அச் சூரியனும் அந்த மணியை அவனிடம் தந்துவிட்டுத் தன் இடத்துக்குச் சென்றான். - அந்த ஒளிமிக்க மணியைத் தன் மார்பில் பதக்கமாகத் தொங்கவிட்டுக் கொண்டான். கண்ணன் இருக்கும் துவாரகைக்குச் சென்று அவனைச் சந்தித்துத் தன் பெருமையைக் காட்டிக் கொள்ள விரும்பினான். அவனைக் கண்ட சாமானியர்கள் சூரியனே அவன்' எனத் தவறாகக் கருதிக்கொண்டு கண்ணனிடம் சென்று, "தங்களைக் காணச் சூரிய பகவான் வருகிறார்" என்று உரைத்தார்கள்.