பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86◇ ராசீ



ஐயமும் சிறிது ஏற்பட்டது. தான் துவாரகைக்குத் திரும்புவதில்லை. என்றும், துவாரகைக்கு வந்து தனக்கு ஆக வேண்டியது ஒன்றும் இல்லை என்றும் கூறி அனுப்பினான். அவன் அங்கேயே மிதிலையில் ஜனகன் விருந்தினனாக மூன்று ஆண்டுகள் தங்கிவிட்டான். அந்தச் சமயத்தில் தான் துரியோதனன் அங்கு வந்து உடன்தங்கி அவனுக்குப் பணிவிடை செய்து கதாயுதப் பயிற்சி பெற்றுக் கொண்டான். அதுமுதல் துரியோதனனிடம் பலராமனுக்கு வாஞ்சை உண்டாகியது.

கண்ணன் துவாரகையிலும், பலராமன் மிதிலையிலுமாகத் தங்கி வாழ்ந்து வந்தனர். மூன்று ஆண்டுகள் கழிந்தன. கண்ணனின் சார்பில் உக்கிரசேனனும், சில யாதவர்களும், மிதிலைக்குச் சென்று பலராமனைச் சாந்தப்படுத்தினர். கண்ணனிடத்தில் மணி இல்லை என்று தெரிந்தது. பலராமனும் மனம் மாறிச் சினம் ஆறித் துவாரகைக்குச் சென்றான்.

ஈண்டு இவ்வாறு இருக்கத் துவாரகையில் அக்குருவரிடத்தில் இம்மணி இருந்ததால் நாட்டில் நன்கு மழை பெய்தது. மக்கள் நோயின்றி வாழ்ந்தனர். அவரிடம் செல்வம் கொழித்ததால் தான தருமங்களையும், வேள்விகளையும், தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். இதைக் கவனித்த கண்ணன் மணி அக்குருவரிடத்தில்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டான்.

உடனே ஒரு சபை கூட்டி அக்குருவரை அழைப்பித்தான். "உன்னிடத்தில்தான் மணி உள்ளது. உண்மையை ஒப்புக்கொள்; சத்திய விரதன் நீ; பொய்