பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் திருக்கதை ◇87



சொல்ல மாட்டாய்" என்று அவரை உயர்த்தி வைத்துப் பேசினான். அவர் மணி தன்னிடத்தில் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டார். தாம் அதைச் சத்திய காரியங்களுக்குப் பயன்படுத்துவதாகவே கூறினார். அதைக் கண்ணனிடம் சேர்ப்பிக்கத் தான் காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். கண்ணன் தனக்கு அம் மணி தேவையில்லை என்றும், தன்னைப்பற்றிய ஐயம் பலராமனுக்குத் தீர வேண்டும் என்றும், அதற்காக அவன் முன்னிலையில் வந்து அதனைக் காண்பித்துப் போகவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அக்குருவரிடம் அவனுக்குத் தனிமரியாதை இருந்தது. பலராமனும் அத் திருச் சபையில் இருந்தான். அனைவரும் கேட்கும்படி மேலும் தொடர்ந்தான். "இந்த மணி தங்களைப் போன்ற தூய சிந்தையுடைய வரிடத்தே தான் இருக்கவேண்டும். பிரமசரியாக பரிசுத்தனாக இருக்கவேண்டும். உமக்கே அத் தகுதி இருக்கிறது. நான் இந்த மணியின் பொருட்டு வாழ்க்கைச் சுவைகளை இழக்கத் தயாராயில்லை. என் அண்ணன் பலராமனோ சுரபானம் செய்யக்கூடியவர்; அவரும் தம் இன்பங்களையும், சுகங்களையும் இழக்கச் சம்மதிக்க மாட்டார். சத்தியபாமையோ இதை எப்பொழுதும் தாங்கி இருக்க முடியாது. உம்மைப் போன்ற சத்திய சீலர்கள் இதைத் தாங்கி உலக நன்மைக்காகப் பயன் படுத்துவதே தக்கதாகும்” என்று சொல்லி அவரிடமே சேர்த்து