பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94◇ ராசீ



சத்தியபாமை இதைக் கேட்டு வெகுண்டாள். அவனைப் பார்த்து "காவல் காப்பவனே! இது எந்தத் தனி மனிதருக்கும் உரியது அன்று; பாற்கடலில் பிறந்த அமுதம், சந்திரன், காமதேனு முதலியவை எப்படி யாவர்க்கும் பொதுவானதோ அப்படியே இந்தப் பாரிஜாதமும் பொதுவாகுமேயன்றிச் சசிதேவிக்கு மட்டும் உரிமை கொண்டாடுவது பொருந்தாது. ஒரு மானுடப் பெண் எடுத்துக்கொண்டேன் என்று சொல்லிவிடு; இந்திரன் உங்களுக்கு அதிபதியாக இருக்கலாம்; அவளுக்குப் பிராணநாயகனாக இருக்கலாம்" என்று மிடுக்காகக் கூறி அனுப்பினாள். அவன் அப்படியே சசிதேவியிடம் எடுத்துச் சொல்ல அவள் இந்திரனின் ஆணவத்தைக் கிளர, அவன் அவசரப் பட்டுப் படைகளுடன் வந்து மோதினான்; மனைவியின் தூண்டுதலால் தன் அறிவை இழந்தான்; யாருடன் மோதுகிறோம் என்பதைப் பற்றிக்கூட எண்ணிப் பார்க்க வில்லை. எவனைச் சரண் அடைந்து நரகனை எதிர்க்கச் சொன்னானோ அவனை எதிர்க்க முற்பட்டான். கண்ணன் தன் தேவபலத்துக்கு அஞ்சி விட்டுக் கொடுத்து விடுவான் என்று எதிர்பார்த்தான். போர் தொடங்கியது. இந்திரனின் பட்ைகள் தோற்று ஓடின; வச்சிராயுதத்தைக் கண்ணன் மீது வீசினான்; கண்ணன் அதை மிக எளிதில் தன் கைகளில் பற்றிக்கொண்டு அடுத்து அவன் செய்வதை எதிர் நோக்கினான் படை இழந்து தன் கைக் கருவி இழந்து தனித்து நின்றான். கண்ணனின் கையில் இருந்த சக்கராயுதத்தைக் கண்டு அஞ்சிப் புறமுதுகிட்டு ஒடத் தொடங்கினான்.