உலகம்
35
கரு: வீடா இது? அடா, அடா, அடா! ஏண்டி இப்படி உயிரை வாங்கறே...இப்ப எந்த ரயிலுக்கு நேரமாகுதுன்னு எழுப்பித் தொலைக்கறே என்னமோ...கடியாரத்தைப் பார்த்து வேலைக்குப் போயி, காலண்டரைப் பார்த்துச் சம்பளம் வாங்கற உத்யோகம் கெட்டுவிடப் போகுதா?...
வீராயி: (ஆத்திரமும் கேலியும் கலந்த குரலில்) உங்களுக்கு ஏங்க வேலைவெட்டி...நான் இல்லே உழைக்க! நீங்க படுத்துத் தூங்குங்க...வித்து விசாரம் துளியாவது இருந்தா இப்படியா இருப்பிங்க...ராத்திரிக்கெல்லாம் சுத்தறது, பகலெல்லாம் படுத்துத் தூங்கறது. குடும்பம் உருப்பட்டுவிடுமேல்லோ...
கரு: ஏண்டி இப்படிச் சபிச்சிக் கொட்டறே...உன் இழவுக்காகத்தான் ஆலாப்பறந்து பார்க்கறேன்...வேலை கிடைச்சாத்தானே!! போயி...எங்காவது திருடவா, சொல்லு! அதையாவது...
வீராயி: (அழுகுரல்) என் மனசை வேகவைக்காதே!
இது என்னது?
வீட்டு: வீராயி! எப்ப வந்து கேட்டாலும் அவரு வரட்டும்னு சொல்லி நாளை ஓட்டினியே...இப்ப அவனும்