பக்கம்:கண் திறக்குமா.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1O2

கண் திறக்குமா?

‘உங்களை ஒருவர் முந்திக்கொண்டு விட்டார்; அதற்காகத்தான் சிரித்தேன்!” என்றாள் அவள்.

‘அப்படியென்றால்...?” ‘நீங்கள் இப்போது இரக்கங்காட்டுகிறீர்களல்லவா? - அதே இரக்கத்தை இரண்டு வருடங்களுக்கு முன்னால் இந்த அப்பாவிப் பெண்ணிடம் ஒருவர் காட்டி விட்டார். அதன் பலன்தான் இந்தக் குழந்தை.”

‘நீங்கள் என்னைப் பற்றித் தவறாக நினைக்கிறீர்கள்...’

“ஆமாம்; முதலில் அவரும் அப்படித்தான் சொன்னாராம்!’

எனக்கு வேதனையாயிருந்தது - இதற்குள் ‘அம்மா!’ என்று இடைமறித்தாள் செங்கமலம்.

“என்ன, சொல்லித் தொலையேன்?’ என்று அலுத்துக் கொண்டாள் தாயார்.

‘முதலில் என்னைக் கொன்றுவிடு, அம்மா! - பிறகு யாரிடம் வேண்டுமானாலும் என் கதையைச் சொல்லு?’’ என்றாள் அவள்.

‘இனிமேல் உன்னைக் கொன்றால் என்ன, கொல்லா விட்டால்தான் என்ன? - கெட்ட பால் நல்ல பாலாகப் போவதில்லையல்லவா?’ என்றாள் தாயார்.

நான் பொறுமையிழந்து, ‘நீங்கள் இருவரும் இப்படி மனம் உடைந்து பேசிக்கொள்வதற்குக் காரணமாயிருந்த அந்தக் கிராதகன் யார்?’ என்று கேட்டேன்.

அவ்வளவுதான்: ‘உங்களுடைய அருமை மைத்துனன் தான் அந்தக் கிராதகன்!’ என்றாள் செங்கமலத்தின் தாயார் ஆத்திரத்துடன்.

‘'என்ன, நீங்கள் சிவகுமாரனையா சொல்கிறீர்கள்?’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/105&oldid=1379103" இலிருந்து மீள்விக்கப்பட்டது