பக்கம்:கண் திறக்குமா.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

115



ஒருவேளை சித்ரா தற்கொலை செய்து கொண்டிருப்பாளோ? - சீ சீ, அப்படியெல்லாம் ஒன்றும் நடந்திருக்காது; அவள் சாந்தினியை நம்பிச் சென்னைக்குத்தான் போயிருப்பாள்!

இந்த நம்பிக்கையுடன் செங்கமலம் தங்கியிருந்த வீட்டையடைந்து, நான் அவர்களிடம் நடந்த விஷயத்தைச் சொன்னேன் - ‘போலீஸ், லாக் - அப்’ என்ற வார்த்தைகளைக் கேட்டதும் அவர்கள் நடுங்கி, “எங்களைப் பட்டணத்திலாவது கொண்டுபோய் விட்டு விடுங்கள்; உங்களுக்குப் புண்ணியமுண்டு’ என்றனர், வேறுவழியின்றி நான் அவர்களை அழைத்துக்கொண்டு சோளகம்பட்டி ஸ்டேஷனை நோக்கி விரைந்தேன்.


11. அவள் சொன்ன கதை


கூகுக்’ என்று கூவிவிட்டு, ரெயில் பெருமூச்சு விட்டுக் கொண்டே நகர்ந்தது, அத்துடன் சேர்ந்து நானும் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டேன்.

அப்போது ஜன்னலுக்கு வெளியே தலை நீட்டிக் கொண்டிருந்த என்னை நோக்கி, ‘'சாமி, சாமி!’ என்று கத்திக்கொண்டே, குடியானவன் ஒருவன் ஓடிவந்தான்.

‘யாரைக் கூப்பிடுகிறாய், என்னையா?’ என்று நான் அவனை நோக்கிக் கேட்டேன்.

“ஆமாங்க. மிராசுதார் ஐயா இந்தத் தந்தியை உங்கக்கிட்டே கொடுக்கச் சொன்னாருங்க!” என்று ஒரு கவரை அவன் என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றான்.

நடுங்கும் கைகளுடன் நான் அதைப் பிரித்துப் பார்த்தேன் - “கவலை வேண்டாம்; சித்ரா இங்குவந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/118&oldid=1379447" இலிருந்து மீள்விக்கப்பட்டது