பக்கம்:கண் திறக்குமா.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

183

வில்லை. நல்ல வேளையாக அப்போது எனக்குத் தெரிந்த பையன் ஒருவன் அங்கே வந்து சேர்ந்தான் - அவனும் அரசியல் வாதிதான். ஏதோ ஒரு சதி வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பதாக அவன் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தான்; போலீஸார் அவனைத் 'தேடு, தேடு' என்று தேடிக்கொண்டிருந்தார்கள். இதனால் தலைமறைவாகத் திரிந்துகொண்டிருந்த அவனுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுப்பதுகூடக் குற்றம் என்று சர்க்கார் அப்போது அறிவித்திருந்தார்கள். இந்த லட்சணத்தில் அவன் எத்தனை நாட்கள் தலைமறைவாயிருக்க முடியும்? அலுத்துப் போய்ப் போலீஸாரிடம் சரணடைந்து விடப் போவதாக அவன் என்னிடம் சொன்னான். கிடைத்த சந்தர்ப்பத்தை நான் நழுவ விடுவேனா? அவனைக் கொண்டு போய்க் குற்றாலலிங்கம் வீட்டில் சேர்த்து விட்டுப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தேன். அடுத்த நிமிஷமே அவர்கள் வந்தார்கள்; அவனைப் பிடித்துக்கொண்டு சென்றதோடு, குற்றாலலிங்கத்தையும் பிடித்துக்கொண்டு சென்றார்கள். அவருடைய கனவு நனவாயிற்று; என்னுடைய கவலையும் தீர்ந்தது. அன்று மாலை வெளியான பத்திரிகைகளிலெல்லாம் அப்பழுக்கற்ற அந்தத் தியாகியின் பெயர் கொட்டை எழுத்துக்களில் பிரசுரமாயிற்று!"

"அட பாவிகளா!"

"கேளப்பா, புண்ணியவானே! குற்றாலலிங்கத்தை எனக்குப் பிடித்திருந்ததற்கு இது மட்டும் காரணமல்ல; இன்னொரு காரணமும் இருந்தது!"

"அது என்ன காரணம்?"

"அவருடைய செல்வக் குமாரனான சிவகுமாரன், யாருடைய கற்பையோ அழிக்கப்போய்ச் செத்தொழிந்தான் என்றல்லவா பத்திரிகைகளில் போட்டிருந்தது? ஆனால் குற்றாலலிங்கம் தாம் பேசும் கூட்டங்களிலெல்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/186&oldid=1378757" இலிருந்து மீள்விக்கப்பட்டது