பக்கம்:கண் திறக்குமா.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


19. மானத்துக்கு மரியாதை

தற்குப் பின் ஏழாவது முறையாக நான் சிறையை விட்டு வெளியே வந்தபோது காங்கிரஸ் மகாசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது. பதவியைக் கைப்பற்ற வேண்டுமென்பதில் பலமான போட்டி இருந்தது. அதுவரை தேசத்துக்காக ஒரு சிறு துரும்பைக்கூட எடுத்துப் போடாத ஜரிகைத் தலைப்பாகைக்காரர்கள் திருடர்களைப் போலப் புழக்கடை வழியாக வந்து காங்கிரஸில் சேர்ந்தார்கள். கட்சியின் கட்டுப்பாடும் ஒழுங்கும் நாளுக்கு நாள் குலைந்து வந்தன. கட்சிக்குள் கட்சியாகப் பல கட்சிகள் முளைத்தன. காந்தி மகாத்மா மனமுடைந்து காங்கிரஸிலிருந்து விலகினார். ஆயினும், வேண்டும்போதெல்லாம் அவருடைய சேவையைக் காங்கிரஸ் மகாசபை விரும்பிப் பெற்று வந்தது.

நானும் காங்கிரஸ்காரன் என்ற முறையில் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கினேன். என்னைப் போன்ற தொண்டர்களுக்கெல்லாம் அப்போதிருந்த ஆசை ஒன்றே ஒன்றுதான். அதாவது, காங்கிரஸ் பெருவாரியான வெற்றியடைய வேண்டும்; அந்த வெற்றியைக் கண்டு பிரிட்டிஷ் சர்க்கார் கிலியடைய வேண்டும் - இந்த ஆசையின் காரணமாக நாங்கள் இரவு பகல் என்று பாராமல் வேலை செய்து வந்தோம். எங்களுக்கு வேண்டிய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பண்டிதர் நேரு, தீரர் சத்தியமூர்த்தி போன்றவர்கள் அவ்வப்போது அளித்து வந்தார்கள்.

பாரிஸ்டர் பரந்தாமனோ எங்களைப் போன்ற தொண்டராயிருக்கவில்லை; சிறையிலிருந்து வெளியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/193&oldid=1379606" இலிருந்து மீள்விக்கப்பட்டது