பக்கம்:கண் திறக்குமா.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

207

"மன்னிக்கவேண்டும்; நான் இன்னும் மறக்கவில்லை !"

"உமக்காக மறக்க வேண்டாம்; சாந்தினிக்காக மறந்துவிடுமே!"

"ஏன் சாந்தினி, உனக்காக அதை நான் மறந்துவிட வேண்டுமா?" என்றேன் நான்.

"அதற்குப் பதிலாக என்னை வேண்டுமானால் மறந்து விடுங்கள்!" என்றாள் அவள்.

“"நாசமாய்ப் போச்சு!" என்று நடையைக் கட்டினார் அவர்.



ன்னுடைய கல்யாண விஷயத்தில் இவ்வளவு தூரம் நான் பிடிவாதமாக இருந்ததற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் நாடு விடுதலை அடையும் வரை நான் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பதே நல்லதென்று எனக்குத் தோன்றிற்று. இந்தியா என்னும் பெரிய குடும்பத்தின் பிரச்னையே இன்னும் தீராமலிருக்கும் போது இன்னொரு இரண்டிலும் இன்பமும் உண்டு; துன்பமும் உண்டு. அவற்றில் ஏதாவது ஒன்றைத் தற்சமயம் கட்டிக் கொண்டு அழுதால் போதாதா?

இந்த நிலையில் நான் இருக்க, அந்தக் காலத்தில் இன்னொரு அதிசயமும் அங்கங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. அதாவது, கல்யாணமான சிலர் இந்தியா சுதந்திரம் அடையும் வரை பிரம்மச்சாரிகளாக இருப்போம் என்று விரதம் பூண்டனர். இந்த விநோதமான விரதத்துக்கு ஆரம்பத்தில் காந்தி மகானின் ஆதரவும் ஓரளவு இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/198&oldid=1378716" இலிருந்து மீள்விக்கப்பட்டது