பக்கம்:கண் திறக்குமா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

19

தங்கள் வாழ்க்கை ஒரே ஆனந்த சாகரமாயிருக்குமென்றும் அவர்கள் கனவு காண்கிறார்கள் - அந்த மாதிரி நீங்களும் கனவு காண்கிறீர்களாக்கும்?”

“இந்தக் காலத்து ஆண்களும் பெண்களும் மட்டும் என்ன, அம்மா? அந்தக் காலத்து ஆண்களும் பெண்களும் கூட அப்படித்தானே இருந்திருக்கிறார்கள்! - ராமனும் சீதையும், சத்தியவானும் சாவித்திரியும், நளனும் தமயந்தியும், துஷ்யந்தனும் சகுந்தலையும், ஒருவரைப் பார்த்து ஒருவர் காதல் கொள்ளவில்லையா?”

“ஆமாம், அவர்களுடைய வாழ்க்கையெல்லாம் ஒரே ஆனந்த சாகரமாயிருந்ததாக்கும்! - நான் சொல்கிறேன் - காதல் கல்யாணமாகட்டும், காதல் இல்லாத கல்யாணமாகட்டும் - வாழ்க்கை யென்பது எப்போதுமே கல்லும் முள்ளும் நிறைந்த காட்டுப் பாதைதான்; கதைகளில் வேண்டுமானால் அது தார் போட்ட நாட்டுப் பாதையாய் இருக்கலாம் - ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவுமா?”

“அந்தக் காட்டுப் பாதையில் பிரயாணம் செய்யும் பாதசாரிகள், தங்கள் சிரமத்தை ஒன்றுபட்டுச் சகித்துக் கொள்வதற்காகவாவது அவர்களுக்குள் ஒருவிதமான அன்னியோன்னிய பாவம் இருக்க வேண்டாமா? - அதைத் தான் நாங்கள் காதல் என்கிறோம் - அதில் என்ன தப்பு?” என்று கேட்டுவிட்டுச் சித்ரா என் பக்கம் திரும்பி, “நீங்கள் என்ன சொல்கிறீர்கள், அண்ணா?” என்று கேட்டாள்.

“நான் என்ன சொல்லக் கிடக்கிறது? - எனக்கென்னமோ இந்தக் காதல், கல்யாணம் என்பதெல்லாம் வெறும் ‘பிரஜாபிவிருத்திக் கைங்கரியம்’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது! அந்தக் கைங்கரியத்தில்தான் எத்தனையோ பேர் ஈடுபட்டிருக்கிறார்களே, நாமாவது தேசாபிவிருத்திக் கைங்கரியத்தில் இறங்கினால் என்ன?” என்று சொல்லிக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/22&oldid=1379263" இலிருந்து மீள்விக்கப்பட்டது