பக்கம்:கண் திறக்குமா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

கண் திறக்குமா?

ஏதோ ஒரு தினுசான உணர்ச்சி என் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்து, மின்னல் வேகத்தில் தேகம் முழுவதும் பரவிப் புல்லரிப்பை உண்டாக்கிற்று.

இந்தச் சமயத்தில் கோர்ட்டுக்குக் கிளம்பிய பரந்தாமன், “ஏன் செல்வம், அந்த ‘நியூஸன்’ஸைப் பார்க்க உனக்கு அருவருப்பாயில்லையா? - மகாத்மாவுக்கு ஜேயாவது, மண்ணாங்கட்டியாவது! அவன் மகாத்மாவாயிருந்தால் சர்க்காருக்கும் பொது ஜனங்களுக்குமிடையே கலகத்தை மூட்டிவிடும் துராத்மாவின் காரியங்களையெல்லாம் செய்துகொண்டிருப்பானா? - பார்க்கப்போனால் இந்தப் பயல்கள் இவ்வளவு சீக்கிரத்தில் அந்தக் காந்தி கைதான விஷயத்தைத் தெரிந்து கொண்டு கூச்சல் போடுவதற்குக் கூட அந்த வெள்ளைக்காரன் தானே காரணம்? அவன் வந்திராவிட்டால் தந்தியையாவது, பத்திரிகையையாவது இவர்கள் கனவிலும் கண்டிருக்க முடியுமா? - என்ன நன்றி கெட்டத்தனம், இந்தப் பயல்களுக்கு! இவர்களுக்குத்தான் சுயராஜ்யம் வேண்டுமாம், சுயராஜ்யம்” என்று மேலும் மேலும் ஏதேதோ அடுக்கிக் கொண்டே போனார்.

என்னால் பொறுக்க முடியவில்லை. “நிறுத்துங்கள்! அந்த வெள்ளைக்காரன் இந்த நாட்டில் பொதுஜன செளகரியத்துக்கென்று செய்திருக்கும் ஒவ்வொரு காரியமும் உண்மையில் அவனுடைய ஏகாதிபத்தியத்தைக் காத்துக்கொள்வதற்காகச் செய்தவை என்பதை நான் அறிவேன். நீங்கள் சொல்வதுபோல அவை பொதுஜன நன்மைக்கென்றே ஏற்பட்டவையென்றாலும், அவற்றுக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும் என்ன சம்பந்தம்? அந்தச் சாதனங்களை அமைத்தவன் யாராயிருந்தாலும் அவனை ‘வெள்ளைக்காரன்’ என்ற கண் கொண்டுதான் பார்க்க வேண்டுமா? நாளுக்கு நாள் வளர்ச்சியடையும் மனித சமுதாயம் தன் செளகரியத்துக்கென்று சாதித்திக் கொண்ட காரியங்கள் அவை என்று ஏன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/25&oldid=1379267" இலிருந்து மீள்விக்கப்பட்டது