பக்கம்:கண் திறக்குமா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

39

உள்ளே இழுத்துக் கொள்பவளாயிருந்தாள்.

அந்தப் பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும் பரந்தாமனாரிடம் மிக்க அனுதாபம் உண்டாகும். ‘பாவம், அவர் எவ்வளவோ முற்போக்குடையவராயிருக்கிறார்; இந்தப்பெண் அவருக்கு நேர் விரோதமாகயிருக்கிறாளே!’ என்று எண்ணி வருந்துவேன்.

சில சமயம், கையில் அதிகாரம் இல்லாமலே சமூகத்தைச் சீர்திருத்திவிட முடியும் என்று சொல்லும் அவரால் தம் வீட்டிலுள்ளவர்களையே அவ்வாறு சீர்திருத்தமுடிய வில்லையே! என்று நினைக்கும் போது எனக்குச் சிரிப்பும் வருவதுண்டு.

இதைப்பற்றி அவரையே கேட்டுத் தெரிந்துகொண்டு விடலாமென்றாலும் அதற்கு வேண்டிய தைரியம் அப்போது என்னிடம் இல்லை. ‘அதெல்லாம் என் சொந்த விஷயம்’ என்று அவர் முகத்தில் அடித்தாற்போல் பதில் சொல்லிவிட்டால் என்ன செய்வது?

இப்படியெல்லாம் நான் மனத்தைப் போட்டு உழற்றிக்கொண்டிருந்த சமயத்தில்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

வழக்கம்போல் ஒருநாள் பாரிஸ்டர் வீட்டுக்குச் சென்றபோது அவர் வீட்டில் இல்லை. வாசலில் அந்தப் பெண் மட்டும் நின்று கொண்டிருந்தாள். அவள் என்னைக் கண்டதும் உள்ளே சென்றுவிட்டாள்!

சாந்தினியும் அப்போது கலாசாலைக்குப் போயிருந்தாள் போலிருக்கிறது. நான் மெள்ள உள்ளே சென்று ஒரு முறை அங்குமிங்குமாகச் சுற்றிப் பார்த்த பிறகு வீட்டுக்குத் திரும்பிவிட்டேன்.

மறுநாள் சென்றபோது, ‘நேற்று எங்கே உன்னைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/42&oldid=1379033" இலிருந்து மீள்விக்கப்பட்டது