பக்கம்:கண் திறக்குமா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

41


அந்த ஒரு நிமிடத்தில் ஒரு வருடம் சிறை வாசம் செய்து விடுதலையடைந்த உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது.

என்னுடைய நிலைமை கொஞ்சம் சீரடைந்ததும் அவருடைய நிலைமையைச் சீர்படுத்த எண்ணி, “அதனாலென்ன, ஈவிரக்கமற்ற சமுதாயத்திற்குப் புத்தி கற்பிப்பதற்காக நீங்களே ஒரு பால்ய விதவையை இரண்டாந்தாரமாகக் கொண்டு வழி காட்டினீர்கள் போலிருக்கிறதே!” என்றேன்.

அவ்வளவுதான்; ‘கலீர்’ என்ற சிரிப்பொலி என் காதில் விழுந்தது. திரும்பிப் பார்த்தேன்; சாந்தினி எங்கள் பார்வையிலிருந்து நழுவிக் கொண்டிருந்தாள்.

அது மட்டுமா? நான் எதிர்ப்பார்த்ததற்கு விரோதமாகப் பரந்தாமனாரின் நிலைவேறு இன்னும் மோசமாயிற்று; “இல்லை, அப்படியெல்லாம் நான் ஒன்றும் செய்ய வில்லை!” என்று தடுமாறினார்.

நிலைமையை எப்படியாவது சமாளித்தே தீருவது என்ற உறுதியுடன் “ஓஹோ, அப்படியே இருந்தாலும் அதில் ஒன்றும் குற்றம் இல்லையே! உங்களுக்கோ வெள்ளத்தோடு போகும் சமுதாயத்தை எப்படியாவது கரைசேர்க்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது. ஆனால் அதற்கேற்றாற்போல் எல்லாம் அமைய வேண்டாமா? சாந்தினி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் முதல் தாரம் தவறிய நீங்கள், உங்களுடைய கொள்கைப்படி இரண்டாந்தரமாக ஒரு பால்ய விதவையைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கலாம்; ஜாதிப் பிரஷ்டத்தையும், சமூக பகிஷ்காரத்தையும், துச்சமாகக் கருதியிருக்கலாம்; தனிப்பட்ட முறையில் அவற்றை எதிர்த்து நின்று போராடி வெற்றியோ, தோல்வியோ அடைந்திருக்கலாம். அதன் பலாபலனும் உங்களோடு போய்விடும்; வேறு யாரையும் பாதிக்காது. ஆனால் உங்கள் நிலைமைதான் வேறாக இருக்கிறதே! சாந்தினியின் பிற்கால வாழ்க்கையைப் பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/44&oldid=1379049" இலிருந்து மீள்விக்கப்பட்டது