பக்கம்:கண் திறக்குமா.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

கண் திறக்குமா?

அதனால் எனக்கு ஏதாவது நஷ்டமுண்டோ? கிடையவே கிடையாது; ஒருவிதத்தில் லாபம் என்றுகூடச் சொல்லலாம். ஒரு காரியத்தில் இறங்கினால் அப்படியல்லவா இறங்க வேண்டும்? - இது தெரியவில்லையே, உனக்கு?”

“எப்படித் தெரியும்? எல்லாரும் உங்களைப் போலவே ‘புத்திசாலிகளா’யிருந்துவிட முடியுமா?”

“சரி, என்னவோ சிறைக்குப் போகும் போதுதான் ஒருவருக்கும் தெரியாமல் போனாய்; வரும்போதாவது நாலுபேருக்குத் தெரிந்து வந்திருக்கக் கூடாதோ? எனக்கு மட்டும் நீ விடுதலையாகும் தேதியைக் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தால், என்னவெல்லாம் செய்திருப்பேன்? ‘அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து நின்று மூன்று வருடகாலம் சிறை சென்ற வீரர் வருகிறார்: இரத்தம் சிந்தியும் சித்தம் கலங்காத தீரர் வருகிறார்!’ - என்றெல்லாம் சுவரொட்டி விளம்பரங்கள் செய்து, ஜனங்களை ஒரே பைத்தியங்களாக அடித்துவிட்டிருக்க மாட்டேனா? - அப்புறம் ஒரு பெருங் கூட்டத்துடன் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து, தாங்க முடியாதபடி உனக்குப் பூமாலைகளையும் புகழ்மாலைகளையும் சூட்டி, வரவேற்றிருக்க மாட்டேனா?”

“நீங்கள் என்ன, ஜனங்களை ஆட்டு மந்தைகளாகவா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

“இல்லாமல் என்னவாம்? அதற்காகத்தானே என்னுடைய மேலான ஆதரவைக் கொண்டு இந்த நகரிலே பல கிளைச்சங்கங்கள் நடந்து கொண்டிருக்கின்றன? அவையெல்லாம் நான் சொன்னபடி கேட்காமல் வேறு என்ன செய்யும்? அப்படியே செய்தாலும் என்னுடைய பணம் இல்லாமல் அவை எப்படி உயிர் வாழும்? இவற்றைப் புரிந்துகொள்ளாமல் யாரோ ஒருவனைப் போல இப்படிச் சந்தடி செய்யாமல் வந்து எனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/83&oldid=1378717" இலிருந்து மீள்விக்கப்பட்டது