பக்கம்:கதாநாயகி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம் 11


“ஆமாம், நிச்சயமாகத்தான்”

பிறரைக் குறை சொல்லித் தாங்கள் உயர நினைப்பவர்கள் போலிருக்கு அவர்கள்!

“ஆமாம்”

“அப்படியானால், இவங்களையும் குற்றப் பரம்பரை லிஸ்டில் சேர்க்க வேண்டியதுதான் என்று சொல்லுங்க!” என்று ஒரு போடு போட்டான் பூமிநாதன்.

இதற்குப் பதில் எதுவும் சொல்லாமல், பூமிநாதனின் அபிப்பிராயத்தை ஏற்பவன் போன்று, விநயமாகச் சிரித்து வைத்தான் அம்பலத்தரசன். அவன் பூமிநாதனைத் தலை உயர்த்திப் பார்த்தபோது, பூமிநாதனின் முகம் இருந்திருந்தாற் போல சிந்தனையின் பிடியில் சிக்கியிருக்க கண்டான். “என்ன மிஸ்டர் பூமிநாதன்! பலத்த சிந்தனையில் அமிழ்ந்திட்டீங்க?” என்று கேட்டான்.

சிந்தனையின் கலவரம் மாறினாலும் அவனது கண்களின் கலக்கம் மாறவில்லை என்பதை அம்பலத்தரசனால் கணிக்க கூடாமல் இல்லை.

“மறந்துவிட்டேனே! மிஸ் ஊர்வசியின் நடிப்பு எப்படி இருந்துச்சுங்க, ஸார்?”

“பாவம், பரிதாபத்திற்குரிய பெண் அவள்!” என்றான் அம்பலத்தரசன்.

பூமிநாதன் ஏனோ பதட்டம் அடைந்தான். பதட்டத்தின் சூடு மாறாமல், அம்பலத்தரசனை ஊடுருவி நோக்கினான்.

“நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேள்வியைச் சொடுக்கினான். ‘டெர்லின் சட்டையின் வெள்ளை நிறம் குழல் விளக்கில் மேலும் மின்னியது’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/21&oldid=1308027" இலிருந்து மீள்விக்கப்பட்டது