பக்கம்:கதாநாயகி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 கதாநாயகி

________________


வலது விலாப்புறத்தில் லேசாக வலிப்பதாகவும் அவனால் உனர்ந்துகொள்ள முடிந்தது. வழக்கமாக விழுங்கும் 'பீப்ளெக்ஸ்ஃபார்ட்.' டில் இரண்டைப் போட்டுக் கொண்டு ஒரு குவளை தண்ணீர் ஊற்றினால் வலி தீர்ந்துவிடும் என்ற உபாயமும் அவனுக்கு அத்துபடிதான்!

  ஊர்வசியைப் பற்றிய அழகிய நினைவை நெஞ்சக்கிழியில் பதித்துச் சிந்தித்தபோது, தன்னையும் அறியாதபான்மையில் ஒரு புது உரிமையும் ஒரு புது உறவும் தோன்றிச் செழித்ததையும் அவன் நன்கு அறிந்தான். கடந்த சில மணிநேரத்தில் அவன் தனக்குத்தானே பக்குவப்படுத்திக் கொண்டிருந்த புதுத் தெம்புக்கு, அந்தப் புது உறவும் புது உரிமையும் நளினம் மிகுந்ததொரு சூழலை உண்டாக்கிக் கொண்டிருந்ததையும் அவன் நறுவிசாக அறிந்திருந்தான். 
  தேடி வந்தாள் ஊர்வசி, 
  தேடிவத்த தெய்வமா அவள்? 
  விட்ட குறை தொட்டகுறை என்பார்களே, அந்தப் பந்தத்தின் விளைவா அது? 
  அதன் விளைவாகத்தான் ஊர்வசி. அவனைத் தேடி வந்தாளோ? |
  ஒரு நினைவு மலர்ந்தது.
   ஊர்வசியை அவன் முதன் முதலாகச் சந்தித்தது. பொங்கல் திருநாளில்,
  பாரதப் பிரதமர் லால்பகதூர் அவர்கள் அமரத்வம் பெற தாஷ்கண்ட் நாட்டைத் தெரிந்தெடுத்த , அந்த விதிச்செயலையொட்டி, சென்னை மாநகரத்தின் பொங்கல் கோலாகலங்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டிருந்தன. என்றாலும் விளம்பரப்படுத்தப்பட்ட 'காதலே வா!' என்ற
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/36&oldid=1308015" இலிருந்து மீள்விக்கப்பட்டது