பக்கம்:கதாநாயகி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்*45


"அம்மா' என்று சொல்லிய ஊர்வசி தன் தாயின் மார்பில் சாய்ந்தாள். பிறகு, அம்பவத்தரசனைச் சுட்டிக்காட்டி "இவங்களைத் தெரியுமில்லே, அம்மா?" என்றாள்.

அப்பொழுதுதான் அம்பலத்தரசனைக் கவனித்தாள் இந்த அம்மாள்; "வாங்கய்யா. இவங்களையா தெரியாது?..... நீ நடிச்ச மொதல் நாடகத்தைச் சிலாகிச்சு எழுதியவங்களாச்சே?" என்றாள்.

"ஒரு வாட்டி நான் இங்கே வந்தப்ப என்னை உங்க பொண்ணு அழைச்சிட்டு வந்தப்ப தஞ்சாவூர் டிக்ரி காப்பியாட்டமே காப்பி போட்டுக் குடுத்த மீனாட்சி அம்மாளை நான் மறக்கவே மாட்டேனுங்க!" என்று நன்றியறிவு மாறாமல் வெளியிட்டான் அம்பலத்தரசன்.

"வாம்மா, உள்ளே, நீங்களும் வாங்கய்யா!" என்று கூறிக்கொண்டு, அவள் முன்னே நடந்தாள்.

கூடம் வந்தது.

உள்ளே இருந்த தண்ணீர்க் குடத்தை எடுத்து வெளிப்பக்கம் வைத்தாள். பாயை உதறிப் போட்டாள்.

"உட்காருங்க," என்று உபசரித்தாள் மீனாட்சி அம்மாள்.

அம்பலத்தரசன் சம்மணம் கோலிக் குந்தினான். சட்டைப்பைலிருந்த ஊர்வசியின் உறைக் கடிதம் உறுத்திக் கொண்டிருந்தது. அதை மடிப்பு நீக்கி வைத்துக்கொண்டான். அவன் ஊர்வசியைத் தேடியபோது, அவள் கண்கள் அவனைத் தேடின.

"வாம்மா, உள்ளாற" என்று மகளை அழைத்துச் சென்றாள் பெற்றவள். சமையல் கட்டுக்குச் சென்றாள் ஊர்வசி. கீழ்த் தொங்கலில் சீமை ஒடு உடைந்து இருந்தது. அவ்வழியே கதிரொளி பாய்ந்த வண்ணம் இருந்தது. சிட்டுக்குருவிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/55&oldid=1319049" இலிருந்து மீள்விக்கப்பட்டது