பக்கம்:கதாநாயகி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46*கதாநாயகி


பறந்தன.

"ராத்திரி நாடகம் முடிஞ்சதும் எங்கேம்மா போனே?...

கன்னிகழியாப் பொண்ணு அந்நியம் அசலிலே ராத்தங்கலாமா?... பாதிச்சாமத்துக்கு மேலே, ஒரு யோசனை ஓடுச்சு பக்கத்துப் பங்களாவுக்கு ஒடிப்போய், பூமிநாதனுக்குப் போன் பேசினேன். தங்கப் பிள்ளை அது. உடனே தூக்கத்திலேயிருந்து எழும்பி வந்து பேசிச்சு. நாடகம் முடிஞ்சதும் நீ வீட்டுக்குப் புறப்பட்டிட்டதாகச் சொல்லிச்சு, சொன்னதோடே நிற்கலை, இங்கே வேறே வந்திச்சு விடியற வரைக்கும் எங்கெல்லாமோ தேடிச்சாம். நீ தட்டுப்படலையாம்...!"

பேசிக்கொண்டே புதல்வியை நிமிர்ந்து பார்த்தாள் மீனாட்சி அம்மாள். மகளின் கலக்கமடைந்திருந்த அந்த முகத்தைக் கண்டதும் பெற்ற வயிறு பதறிவிட்டது. "ஊர்வசி! ஏனம்மா கலங்கிப் போய் நிற்கிறே?... எங்கேம்மா போயிருந்தே ராத்திரி? உன்னைப் பத்தி நீ ரொம்ப அக்கறையும் கவலையும் கொண்ட தங்கக் கம்பியாச்சே நீ? பின்னே எங்கேம்மா ராத்திரி தங்கியிருந்தே? சொல்லம்மா!... ஏன் பேசாமல் நிற்கிறே பேயடிச்சவளாட்டம்?"

மீண்டும் ஊர்வசி மெளனம் சாதித்தாள்.

அவளை நெருங்கினாள் முதியவள். "நம்ம தமிழ்ச் சமுதாயத்திலே, பொம்பளைங்களுக்குள்ள கட்டுத் திட்டங்கள் ஜாஸ்தி, ஆனா, நமக்குள்ள எல்லைகளோ குறைச்சல்! இப்படிப்பட்ட நிலையிலே, கன்னிப் பொண்ணான நீ ராத்திரி வீட்டுக்கு வரவில்லையின்னா, அதனாலே உண்டாகக் கூடிய பின் விளைவுகள் உனக்குப் புரியாதாம்மா? உன்னை மாலையும் கழுத்துமாப் பார்த்திட்டுச் சாகிறதுக்காகத்தான் தாயே, நான் என் உசிரை வச்சுக்கிட்டிருக்கேன்! சத்தியமாய் இதானம்மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/56&oldid=1319013" இலிருந்து மீள்விக்கப்பட்டது