பக்கம்:கதாநாயகி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம்*67



இன்னும் என் நடிப்புக் கலை வளர்ச்சி பெற்றால், அப்புறம் அவர் எவ்வளவோ பாராட்டுவாரே! பெண்மையின் கற்பைப் பறிகொடுத்த அபலையை ஆதரித்து, தன் மனையாட்டியாக ஏற்றுக்கொண்ட எழுத்தாளரை வெகுவாகப் பாராட்டினார். இந்தக் கட்டம் என் நெஞ்சைத் தொட்டது போலவே, அவர் மனத்தையும் தொட்டிருக்கிறது! அன்பர் அம்பலத்தரசன் 'மனம் உள்ளவர்!'

இரண்டு :

'...பெண் ஒருத்தி அழகாக இருந்துவிட்டால், உடனே அவைளக் காதலிக்கவும் காதல் கடிதம் எழுதவும் தொடங்கி விடுகிறது இளவட்டக்கூட்டம் எல்லாம் சினிமாவினால் வந்த வினை அதற்காகத்தான், பெரியார் சினிமாவே கூடாது என்றார் போலிருக்கிறது! பத்து நாளாக என்னையே சுற்றிச் சுற்றி வந்தான் 'தறுதலை' ஒருவன். என் நாடகத்தைக் கண்டு என்மீது காதல் கொண்டுவிட்டானாம். பணக்காரனாம். நல்லா 'டோஸ் கொடுத்துவிட்டேன். என்னைப் பழிவாங்கியே சாவதாகச் சூள் உரைத்துச் சென்றான். அவன் பெயர் : நாகசாமி'.

மூன்று :

'.காதலே வா!' நாடகம் ஐம்பதாவது நாளாக நடத்தப் பெற்றது. மாண்புக்குரிய டாக்டர் கலைஞர் தலைமை தாங்கினார். எனக்கு நல்ல எதிர்காலம் காத்திருப்பதாகச் சோதிடம் சொல்லப்பட்டது!

நான்கு :

'...வாழ்வதற்கே! என்னும் புதிய நாடகத்தில் வில்லனாக நடிக்கும் பூமிநாதன் அவர்கள் ரொம்பவும் தங்கமானவர். நான் கற்பழிக்கப்படும் கட்டத்தின் ஒத்திகை இன்று நடைபெற்றது. ‘என்னைத் தயவு செய்து மன்னித்து விடுங்கள்' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/77&oldid=1349240" இலிருந்து மீள்விக்கப்பட்டது