பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்நிதி gf

இருக்கின்றன.அதனே இந்த நூற்ருண்டிலோ, போன நாம் ருண்டிலோ யாரோ கட்டியிருக்கவேண்டும். அந்த வாயில் வளைவினூடே புகுந்தோம். உள்ளே சில கஜங்களுக்குத் திறந்த வெளி; அப்பால் திருக் கோயில் இருக்கிறது.வளே வைக் கடந்து கதிர்காம வேலவன் திருக்கோயில் சங்கிதிக்கு வந்துவிட்டோம்.

முருகனுக்குரிய படை வீடுகளே நான் தரிசித்திருக் கிறேன். உலக நினேவையே போக்கி முருகு மனத்தில் ஆழ்த்தும் திருச்செந்துரைத் தரிசித்திருக்கிறேன். பழனி, திருப்பரங்குன்றம், திருவேரகம் ஆகிய தலங்களையும் பார்த் திருக்கிறேன். வேறு பல திருக் கோயில்களையும் கண்டு தரிசித்திருக்கிறேன். தமிழ் நாட்டுத் திருக் கோயில்கள் உலகில் வேறு எங்கும் காணக் கிடைக்காத அற்புதங்கள். பலகாலம் அமைதியாக வாழ்ந்த சமுதாயத்தின் கலைக் கொழுந்து கோயில் பக்தியிலே ஊறிய மக்களின் அன்பைக் காட்டும் அடையாளம் கோயில்; வேற்றுமைகளே மறந்து இறைவன் திருமுன் அடங்கி ஆனவங் கழலச் செய்யும் அதிசய சக்தியையுடைய இடம் கோயில், அந்தக் கோயில் களே யெல்லாம் கண்ட கண்களால் கதிர்காம வேலவன் கோயிலைப் பார்த்தால் கவர்ச்சி இராது. அதைக் கோயி ல்ென்றே சொல்லத் தோன்ருது. நம்முடைய கிராமங் களில் மாரியம்மன் கோயில், பகவதியம்மன் கோயில் என்ற சில ஏழைக் கோயில்கள் இருக்கின்றனவே அவற்றைப் போலத்தான் கதிர்காமக் கோயில் இருக்கிறது. ஒடுகள் வேய்ந்த கோயில் அது. ஆனல் அந்த ஒட்டுக் கூரையின் மேல் மூன்று இடங்களில் மூன்று தங்கக் கலசங்கள் மின்னுகின்றன. . . . . - -

புறக் கண்ணுக்குக் கவர்ச்சியில்லாத திருக் கோயில் அது. அதைப் புறக் கண்ணிலே பார்த்த அளவிலே சின்று விட்டால், 'இதுதான பிரமாதம்?' என்ற கினவே தோன் றும் உற்சவ காலங்களில் ஆயிரக் கணக்கான மக்கள்