பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கதிர்கா யாத்திரை

அகலில் ஏற்றித் தலைமேல் வைத்துக் கொள்வர்ர்கள். கோயிலின் முன்னுள்ள வெளியிலும் குவை குவையாகக் கற்பூரத்தை ஏற்றி வைப்பார்கள். இந்தக் கற்பூர வெளிச்சமே இராக் காலங்களில் பல விளக்குகளே ஏற்றி வைத்ததுபோலத் தோன்றும் .

"இக்தக் கோயிலில் ஒவ்வோராண்டிலும் கான்கு திரு விழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதப் பிறப் பன்று ஒரு திருவிழா நிகழும். ஆனி அல்லது ஆடி மாதத்தில் பந்தற்கால் கடும் விழா நடைபெறும். ஆடி அல்லது ஆவணியில் ஒரு திருவிழாவும், கார்த்திகைத் தீபத் தின்போது ஒரு திருவிழாவும் கடக்கின்றன. ஆடித் திருவிழாவே மிகவும் பெரியது. பதினேந்து நாட்கள் இந்தத் திருவிழா தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இறுதியில் ரோட்டு விழாவோடு உற்சவம் நிறைவேறும்.

கதிர்காம வேலனுடைய திருக்கோயிலே அடுத்து, மேல் திசையில் மற்ருெரு சிறிய ஒட்டுக் கட்டிடக் கோயில் இருக்கிறது. அது விஷ்ணு கோயில் என்று சொல் கிருர்கள். இலங்கையில் திருமாலேயும் ஒரு காவல் தெய்வமாகச் சிங்களவர்கள் கொண்டாடுகிருர்கள். அதன் பின்புறம் ஒரு பெரிய அரசமரம் இருக்கிறது. இந்த மரத்தை மிகவும் புனிதமுடைய தெய்வத் தருவாகப் போற்றி வருகிருர்கள். பெளத்தர்களுக்கு அரசமரம் தெய்வத்தன்மையுடையது. அதனடியில் புத்தர் ஞானம் பெற்ருராதலின், அதனே ஞானத் தருவாக அவர்கள் கொண்டர்டுவார்கள். போதி விருகம் என்று சொல் வார்கள் இலங்கையில் போ (Bo Tree) என்று வழங்கு கிருர்கள். * . . . . .

நமக்கும் அரசமரம் புனிதமுடையதுதான். அதனே மும்மூர்த்திகளின் திருவுருவம் என்று நாம் நம்புகிருேம். அரசமரத்தை வலம்வருவதல்ை பல நன்மைகள் உண் டென்ற எண்ணம் நமக்கு இருக்கிறது. சோமவார