பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிச்செஞ் சோதி

வேதமுடி மீதிருந்த தாளாய் நீயே -

விளங்குமணி மந்திரமா விளைந்தோய் நீயே கூதளமா முடியனருள் பான்ை நீயே

குமரகுரு பரனெனும்பேர் கொண்டோன் நீயே வாதமிலா மோணமுனி வோர்தம் நெஞ்ச

மாக்கோயில் நடஞ்செய்யும் குமரன் நீயே காதலுறு வள்ளியணே நாதன் நீயே

கதிர்காமத் தெழுந்தருளும், மணிச்செஞ் சோதி, மட்டரிய புகழ்உடைய மைந்தன் நீயே

மாதேவற் கரியதிருக் குமரன் நீயே எட்டரிய பரவெளியி லிருந்தோய் நீயே

எத்தாளும் தொடர்ந்துவரும் அன்னே நீயே தட்டரிய மறையாகி மறைவோய் நீயே

தாரகமந் திரப்பொருளாய் நின்ருேய் நீயே கட்டழகுத் திருவுருவக் கந்தன் நீயே . கதிர்காமத் தெழுந்தருளும் மணிச்செஞ் சோதி.

செண்டாகிச் செண்டுக்குள் மலரு மாகித்

திகழ்மலரில் இதழாகி இதழில் மென்மைத் தண்டாது மணமாகித் தண்மை யாகித்

தயாபரளுய்த் தாங்குகின்ற தெய்வம் ேேய. கொண்டாடு மடியார்கள் உள்ளத் துள்ளே .

கோதகன்ற தேளுகி அமுத மாகிக் - கண்ட்ாகிக் கரும்பாகி இனிப்பாய் நீயே

கதிர்காமத் தெழுந்தருளும் மணிச்செஞ் சோதி.

வானகத்தார்க் கரியபெரு மருத்து நீயே -

மண்ணகத்தார் முடிவிளங்குத் தானோன் நீயே

ஊனகத்தே உயிர்போல உயிரை ஆட்டும்

உயிராகி உணர்வாகி உக்தவோம் நீயே