பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தக் காலத்தில் அரசர்களுக்கு ஈசாப்பிடம் அதிக மரியாதை உண்டு. அவர்கள் தங்களது சபைகளுக்கு ஈசாப்பை சகல மரியாதைகளுடன் வரவேற்று உபசரிப்பார்கள். ஈசாப் மக்களுக்குள்ள குறைகளை அரசர்களிடம் கூறுவார். மக்களுக்காக அரசர்களுடன் வாதாடுவார். அவரது முயற்சியால் எவ்வளவோ நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன.

மக்களின் நலம் கருதி வாழ்ந்த ஈசாப்பிற்கு, கடைசியில் மக்களாலேயே மரணம் ஏற்பட்டது என்று சொன்னால், யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், அவருடைய வாழ்க்கைச் சரிதம் நமக்கு அப்படித்தான் கூறுகிறது.

ஒரு சமயம் டெல்பி என்ற இடத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தைப் போக்க, மக்களுக்கு நிறையத் தங்கம் கொடுக்கலாம் என்று நினைத்தான் கிரோசஸ் என்ற அரசன்.

உடனே அவன் ஈசாப்பை அழைத்து வரச் செய்தான். அவரிடம் ஏராளமான தங்கக் காசுகளைக் கொடுத்தான். அவற்றைப் பஞ்சத்தால் அவதிப்படும் மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கச் சொன்னான்.

ஈசாப் தங்கக் காசுகளுடன் அந்தப் பிரதேசத்திற்குச் சென்றார். அரசனின் விருப்பப்படி அவர்களுக்குப் பகிர்ந்துகொடுக்க முயன்றார். ஆனால், சில பேராசைக்காரர்கள் எல்லாவற்றை

36