பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 盖名多

பகலோனது ஒளி, உலகத்தை அதிக நேரம் தழுவி விளங்கியது; அகஸ் நீண்டது.

பகல் நேரம் அதிகமாவதால் சூரியனுடைய ஆட்சி ஒரு நாளில் அதிகமாகின்றது; ஆதித் தனது தேர் அதிக நேரம் ஒடுகிறது; அதை இழுக்கும் ஏழு பச்சைப் புரவிகளின் கால்கள் அதிக நேரம் சிரமப் படுகின்றன. ஒரு நாளைப் போல ஒய்வொழிவின்றி ச த | வ | ண மண்டலத்திலே கிழக்கிலிருந்து மேற்கே நூறு வருஷங்கள், ஆயிர வருஷங் கள், லக்ஷக்கணக்கான வருஷங்களாக ஒடிக் கொண்டிருக் கின்றன அப்பச்சைப் பரிகள். .ெ ச ஞ் சு. ட ர் மூர்த்தியைப் பசுங்கதிர்ப் புரவிகள் இழுத்துச் செல்லுகையில் அச்சுடரோன் ஒளியில் அக் குரகதங்களின் அழகு, பசுஞ்சோதி, எவ்வளவு விதமாகத் தெரிகின்றன! ஆனால் அந்த அழகை அனுபவிப் பவர்கள் யார்? அவைகளுக்கு விடுதலை அளிப்பவர் யார்?

உத்தராயணத்தின் இறுதிக் காலம் அது. காலையில் புறப்பட்டால் வேறொன்றிலும் தம் திருஷ்டியைச் செலுத் தாமல் மேற்கே ேத க் கி வி ைர யு ம் அக்கு திரைகளில் வலக்கை ஒரத்திலுள்ள கு தி ைர பூவுலகத்தில் எதையோ ஒன்றைக் குனிந்து பார்த்தது. அந்தக் கணத்திலே அது. மற்றக் குதிரைகள் ஒடும் லயத்தினின்றும் சிறிது பிசகியது. என்றைக்கும் இல்லாத அந்தப் பி ச ைக அருணன் கவனித்தான். சுளிரென்று சவுக்கால் ஓர் அ டி கொடுத் தான். அது பேரிடியைப் போல உலகமெல்லாம் கிடுகிடுக் கும்படி கேட்டது. ம று ப டி யு ம் பழைய ல ய ம் ஒழுங்கு. பட்டது. அன்று இரவு அந்தக் குதிரைகளை அவிழ்த்து விட்டவுடன் என்றும் இல்லாதபடி அன்று அடி வாங்கிய குதிரையினிடம் மற்ற ஆறு ம் சென்று அதனை நாவால் வருடிக் கொடுத்தன. என்றும் இல்லாத அதிசயம் இன்று: நடக்கக் காரணம் என்ன?’ என்று மிகவும் துக்கத்தோடு மெல்ல விசாரித்தன. அந்தக் குதிரை பெருமூச்சு விட்டது. 'நான் பட்ட அடி பிரமாதமன்று உண்மையிலேயே இன்று நான் ஓர் ஆச்சரியம் க ண் டே ன். அதை நான் எப்படிச், சொல்வேன்! என் கண்களும் உள்ளமும் குளிர நான் கண்ட காட்சியை எப்படி வருணித்துச் சொல்ல முடியும்? எ ன் ன