பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

தீபாவளி நெருங்கி விட்டது. கையில் பைசாவுக்கு வழியில்லை. கால்கஞ்சிக்குக் கொடுத்துக் கொண்டிருந்த பூமி, வெள்ளத்தால் மேடிட்டு விட்டது. பழைய பூமியைக் காண்பதானால் ஐ தேடி மணலை வெட்டிப் பார்க்க வேண்டும். வெட்டினால் புதையலைப் போல பூமியைக் காணலாம். மிச்சம் இருக்கிற புன்செய்யில் என்ன வரப் போகிறது ? ராஜராஜேசுவர தீட்சிதர் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு சிந்தையில் ஆழ்ந்திருந்தார்.

அந்த வழியே ரத்தின வி யா ப ச ரி சோடாதாஸ் சென்றார். எங்கேயோ அவசரமாகப் போகிறவர் தீட்சி தரைப் பார்த்து வி ட் டு நின்றார் : என்ன, தீட்சிதர் ? யோசனை பண்ணினிரோ?’ என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்தார். - .

தீட்சிதர், அதுவா ?” என்று சொல்லிக் கொண்டே மேலே பேச முயன்றார். அவருக்கு வார்த்தை வரவில்லை. அவர் உள்ளத்துள் ஒரு போராட்டம் நிகழ்ந்தது. சிறிது நேரம் சென்றது. அந்த விக்கிரகத்தையே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நீ ங் க ள் சொல்லுகிறபடி ஏன் செய்ய வேண்டும் ?’’ என்றார் தீட்சிதர்,

ஒய்! நீர் பரம்பரையைக் காப்பாற்ற வேண்டாமா ? . விக்கிரகம் எனக்கு எதற்கு ? பேசாமல் நான் சொன்னபடி செய்யும். இரண்டாயிரமென்றால் லேசான காரியமா ? : அது சரிதான். என் மனசு என்னவோ அப்படிச் செய்யத் துணியவில்லை. தவிர, யாராவது பார்த்தாலும்' யார் ஐயா உ ம் ைம் த் தடுப்பவர்? உம்முடைய சொத்துக்கு நீரே உரியவர் அல்லவா ? அந்த இரண்டுக்கும். பதிலாக வேறு வைத்து விடலாம். இன்னும் பிரகாசமான மணிகள் தருகிறேன். '.

"பார்க்கிறேன்.' - சோடாதாஸ் திருப்தியோடு சென்றார்.