பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா.ஜ. 153

இன்றைக்கா ? கு ம் பகோண த் தி ல் ஒரு பெரிய திருட்டாம். அதைப்பற்றிய விவரம் வந்திருக்கிறது. ’’ என்றான் நாராயணன்.

எங்கே, வாசி பார்க்கலாம்' என்றாள் தாய். நாராயணன் வாசித்தான். அவ ன் தாய் மிகவும் ஊக்கத்தோடு கேட்டு வந்தாள். -

நாராயணன் தமிழ்ப் பத்திரிகை வாங்கி வர ஆரம் பித்த பி ன் பு சாப்பிடும் போதும் ம ற் ற ச் சமயங்களிலும் தன் தாய்க்குப் புரிகின்ற விஷயங்களையும் உலகத்தில் நடக்கும் விஷயங்களையும் எடுத்துச் சொல்வான். கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லி, பின்பு அ ந் த ச் சமாசாரத்தைப் பற்றிய வி வ ர ம் பத்திரிகையில் இ ரு ந் த ல் படித்துக் காண்பிப்பான்; புரியாத விஷயங்களை விளக்கிச் சொல் வான். இந்த வழக்கம் மூன்று மாசமாக நடக்கிறது. நாள் தளறினாலும் சமாசாரங்களைக் கேட்பதில் அவன் தாய் தவறுவதில்லை. நாராயணன் ஒரு சமாசாரத்தைப் பாதி வாசித்து விட்டு வேலை இருக்கிறதென்று போய் விடுவான். கமலம் பாக்கிப் பாதியைப் படித்துக் காட்டுவாள். இப்படித் தினம் பத்திரிகை வாசிப்பதில் இருந்து வாரப் பத்திரிகைகள் மாதப் பத்திரிகைகள் வாசிக்கும் வழக்கம் ஏற்பட்டது. கதைப் புஸ்தகங்கள் வாசித்துக் கேட்கும் அளவுக்கு வந்து விட்டாள் ந | ர | ய ண ன் தாய். இப்பொழுதெல்லாம் நாராயணன் தன் தாய் பக்கத்திலேயே வருவதில்லை, எல்லாம் கமலந்தான். தான் வாசிக்கா விட்டாலும் தன் மாமியாருக்காகவாவது வாசித்தாக வேண்டும்.

挚 o o (EO 59. GG

' கமலம், என்ன பண்ணுகிறாய்?" 'அடைக்கு நனைக்கப் போகிறேன்.'

島ー10