பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணையின் வேகம்

f

'ஒரே உற்சாகத்திலே பாடிவிட்டேன். எ ன க் கே சந்தோஷம் தாங்க முடியவில்லை. யாரிடமாவது படித்துக் காட்டா விட்டால் எனக்குப் பைத் தியம் பிடித்து விடும்போல் இருந்தது. இ ரு ப் புக் கொள்ளவில்லை. பாகவதத்தில் எவ்வளவோ கட்டங்கள் அழகாகப் - பாடி இருக்கிறேன். இ னி யு ம் பல அருமையான சந்தர்ப்பங்கள் வருகின்றன. ஆனாலும் இந்தக் கஜேந்திர மோட்சத்தில் எள் ம ன ம் ஒன்றிப்போய் விட்டது. வாக் தேவியின் பிரசாதம் தங்கு. தடையின்றிக் கி ைட த் த து. இதோ படிக்கிறேன், கேளுங்கள்’’ என்று போ த் த ன் ன சுவடிக் கட்டை அவிழ்த்துத் தம் மைத்துனருக்கு முன் அமர்ந்தார்.

என்ன, அ ப் ப டி ப் பிரமாதமாகப் பாடிவிட்டாய் ? வியாஸ்பகவான் மழைபோலப் பொழிந்து தள்ளி இருக்கிறார். அதை வைத்துக் கொண்டு வாக்கியத்துக்கு வாக்கியம், வார்த்தைக்கு வார் த் ைத அப்படியே எடுத்து வைப்பது: தானா பிரமாதம் ? தெலுங்கு பாஷை எப்படி இழுத்தாலும் வளைகிறது. அது வு ம் சமஸ்கிருதத்தில் இருக்கிறதைத் தெலுங்கில் கொண்டு வருவது பெரிய காரியமோ ?' என்று புன்னகை பூத்தபடியே கூறினார் நீநாதர்.

இருவரும் தெலுங்கில் பெயர் பெற்ற கவிஞர்கள். பாகவதத்தை இயற்றித் .ெ த லு ங் கு மொழியை வளம். படுத்தியவர் போத்தன்னா என்னும் பு ல வ ர் பெருமான். அவருடைய மனைவியின் சகோதரர் நீநாதர். கவிஞர் களாகிய இருவரும் மைத்துனக் கேண்மையினாலே ஒருவரை ஒருவர் ஏசிக் கொள்வதும் கிண்டல் பண்ணுவதும் உண்டு . அதனால் அ வர் க ள் நட்பும் பழக்கமும் பி ன் னு ம். ருசியுடயவை ஆயின. - . . . . . 'உங்கள் பரிகாசம் இருக்கட்டும். இதை உங்களுக்குக் சொல்லிக் கா ட் டி விட்டுத்தான் மறுகாரியம் பார்ப்பதாக