பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறாள் கி. வா. ஜ. 27

பார்த்தேன்; இல்லை. சாயங்கால வேளையில் கோயில் பக்கம் போயிருப்பாரோ என்றால் ஆசிரமத்தை திறந்து போட்டு விட்டுப் போக மாட்டார். தவிர, அவருக்கு கோயிலில்தான் .ெ த ய் வ ம் இருக்கிறது என்ற கு று கி ய எண்ணம் இல்லை. எந்த இடத்திலும் அவர் தியானத்தில் அமர்வார்; தேவார திருவாசகங்களைப் பாட ஆரம்பித்து விடுவார் இன்றைக்கெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம். 'காணவில்லையே! எ ங் கே போயிருப்பார்?’ என்று புறக் கடைப் பக்கம் போனேன். மூலிகைகளும் புஷ்பச் செடி களும் நிறைந்த சிறு நந்தவனம் அது. ைவ த் தி ய த் தொழிலைச் செய்து வந்த சதானந்தர், நல்ல மூலிகை களைத் தம்முடைய ஆசிரமத்திலேயே பயிர் செய்து வளர்த்து வந்தார். பூஜைக்கு வேண்டிய பத் தி ர புஷ்பங்களுக்குப் போதுமான செடி கொடிகளும் இருந்தன. -

நந்தவனத்தின் ஒரு மூலையில் ஏதோ புகை தெரிந்தது. அந்தப் பக்கத்தில் பார்த்தேன் சதானந்தர் சுள்ளிகளைத் கொண்டு அக்கினி மூட்டிக் கொண்டிருந்தார். அவர் கையில் ஏதோ காகிதம் போன்ற வஸ்து ஒன்று இருந்தது. - எந்தச் சமயத்திலும் யாதொரு தடையும் இல்லாமல் அவரை அணுகும் உரிமை எனக்கு இருந்தது. நான் மெல்ல அடி மேல் அடி வைத்து அவர் இ ரு க் கு ம் இடத்துக்குச் சென்றேன். நா ன் அவர் பின் பக்கமாக நடந்தமையால் அவர் என்னைக் கவனிக்கவில்லை . நான் அ ரு கி ேல சென்று, என்ன, இந்த வேளையில் இங்கே என்னவோ செய்கிறீர்களே. ஏதாவது ரசவாதம் செய்கிறீர்களோ , என்று சிரித்துக் கொண்டே கேட்டேன். * - -

அவர் தி டு க் கிட் டு என்னைத் திரும்பிப் பார்த்தார். இயல்பாகவே அவர் முகத்தில் ஒரு புன்முறுவல் தவழும். ஆ ன ல் அந்தச் சமயத்தில் அ ந் த நகையைத் தாமே வ ரு வி த் து க் கொண்டவரைப் போலத் தோற்றினார். ஆமாம், ரசவாதந்தான் செய்கிறேன்' என்று சொல்லிய :படியே தம் கையிலிருந்த ஒரு பழைய காகிதத்தைத் தியில் இட்டார். - -