பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 விடுதலை

' என்ன தங்கம் ! இ ப்ப டி ஆகிவிட்டாய் ' என்று அவன் கேட்டான் : இப்போது அவன் பேச்சிலும் துக்கம் தொனித்தது. நீங்களே காரணம்!' என்று அவள் பதில் சொல்லி யிருந்தால் அவன் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டான். அவன் எதிர்பார்த்த விடை அதுதான். .

ஆனால் அவள், இந்த உடம்பு எப்படிப் போனால் என்ன? என் உடம்பு என்ன தல்லவே! உயிருக்கு அழிவு ஏது?’ என்று சொல்லும்போது சதாசிவம் விம்மினான். அவன் வேதாந்தம் பேசுவது போய் இப்போது அவளல்லவா பேசுகிறாள் ? ஆனால் அவள் வேதாந்தத்தில் எவ்வளவு உண்மை அடங்கியிருந்தது !

"ஆமாம்; இனிப் பேசப் போவதில்லை; நர்ன் வந்த வேலை முடிந்து விட்டது. இந்த ஒரு நிமிஷமாவது உங்க ளோடு வெளிப்படையாகப் பேசுகிறேன். உங்களை நம்பி நான் என் உடம்பைத் தாங்கினேன். என் ஆசை நிறை வேறவில்லை. பிறகு நான் உடம்பை மறந்து போனேன். உள்ளத்திலே என் காதல் சஞ்சரித்தது. உங்களை அங்கே வைத்துப் பூசித்தேன். எனக்குக் கணவராக வ ந் த வ ர் இந்தக் குழந்தை வ யி ற் றி ல் இருந்தபோது போனவர் தாம். இன்னும் வரவில்லை. வந்தால்தான் என்ன செய்யப் போகிறார்? இந்தக் குழந்தை பிறந்து இ ர ண் டு வருஷ காலமாகிறது. இவ்வளவு நாள் நான் எப்படியோ உயிரைத் தாங்கி வந்தேன். உங்களைப் பார்த்துப் பேச எனக்கு ஆசை தான். நீங்கள் என் உள்ளத்திலே தான் இருக்கிறீர்களே. அதனால் அழைக்க வில்லை. இப்போது அவசியம் வந்து விட்டது. அழைத்தேன். நான் போய் வருகிறேன். இந்த ஜன்மத்திலேதான் நான் தங்களோடு வாழக் கொடுத்து வைக்க வில்லை. அடுத்த ஜ ன் மத் தி லா வது...' வாக்கியத்தை மு டி ப் பத ற் கு முன் அவளுக்கு மூர்ச்சை போட்டு விட்டது. அவனுக்குத் துக்கம் பொங்கி வந்தது. கோவென்று அழுது விட்டான். அவன் கண்ணிர் அவள் முகத்தில் விழுந்தது. அவளுக்குச் சிறிது தெளிவு வந்தது. அத்தான், என் ஆத்மாவுக்குச் சிறையாக இருக்கும்