பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 . துப்பறிபவன்

அவன் ஏதோ ஒரு துப்பறியும் நாவலைப் படித்து முடித்த சமயம். நாங்கள் போனவுடன் அ வ ன் எங்களை வாருங் களென்று சொல்லக்கூட இல்லை.

"துப்பறிபவன் என்றாலே ஒரு தனி மனிதன்; அவன் மூளையே அபாரம்' என்றான் அவன்.

என்னுடன் வந்த ந ண் பர் என்ன நினைத்தாரோ அறியேன். அப்புறம் உட்கார்ந்தோம். -

"இவர் உன்னுடைய நண்பர்; என்னுடைய நண்பரும் ஆகப் போகிறார்' என்றான் கணபதி. ஆம் என்றேன் நான். தான் துப்பறியும் சாமர்த்தியத்தில் இந்த விஷயமும் ஒன்றென்று அவன் திருப்திப்பட்டுக் கொண்டான்.

"'உங்களுடைய மனைவி மிகவும் குட்டையானவள் அல்லவா?’ என்று கேட்டான் கணபதி.

என்னுடைய நண்பர் ஒன்றும் சொல்லாமல் சிரித்தார். 'ஆ மாம். ெந ட் டை யாக இருப்பவர்களுக்குக் நெட்டையானவர்களே மனைவிகளாகக் கிடைக்கிறார்களா? உங்களுக்கு மிகவும் இளமையிலேயே கல்யாணம் ஆகியிருக்க வேண்டும்' என்று மற்றொரு ஜோஸ்யத்தைச் சொன்னான். வந்தவர் அ த ற்கு ம் பதில் பேசவில்லை. சிரிப்பதோடே நின்று விட்டார், +

உங்களுடைய உருவம் குட்டையும் தெட்டையுமாக இருந்தாலும் உங்கள் இருவர் மனமும் ஒத்து இருக்கும். உங்கள் மனைவியின் யோசனைகளை நீங்கள் அன்போடு ஏற்றுக் கொள்ளும் தன்மை உடையவர்கள்.' -

நண்பர் சிரித்த வண்ணமாக இருந்தார். எனக்கும் ஆச்சரியமாக இருந்தது.

இவையெல்லாம் எ ப் படித் தெரிந்தன?’ என்று கேட்டேன். -

இதென்ன பிரமாதமா? ஊகத்தால் அறிந்ததுதான். துப்பறிபவர்கள் எவ்வளவோ சூட்சமமான விஷயங்களை எல்லாம் கண்டு பிடித்து விடுகிறார்கள்.”