பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 - தபால் மூலம்

இப்படி ஓர் அத்தியாயம், மனிதனுடைய வாக்கின் விசேஷத்தைப் பாராட்டி இருந்தது.

சபைக் கோழையாக இருப்பதைவிட ஒரு சிறையிலே இருந்து விடலாம். நம்முடைய மனசிலே தோன்றுகிற, எண்ணங்களை எடுத்துச் சொல்லத் தெரியாமல் இருப்பதைப் போன்ற பலகீனம் வேறு இல்லை. ந ம க் கு நாக்கை மு. ர ட க வ ச வைத்திருக்கிறார் கடவுள்? எ வ் வ ள வு லாவகமாக வைத்திருக்கிறார்? நம்முடைய பாஷையிலே தான் ஏதாவது சொட்டு'ச் சொல்ல முடியுமா? "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம்' என் று .ே த சி ய கவி முழக்குவதை யார் அறியார்?' -

இவ்வாறு பிரசங்கத்தைப் பற்றியும் தமிழ் மொழியின் பிரபாவத்தைப் பற்றியும் ஒர் அத்தியாயம் இருந்தது.

உங்களுக்குப் பே ச வராதென்று தானே பயப்படு கிறிர்கள்? நீங்கள் வீட்டிலே உங்கள் மனைவி மக்களுடன் பேச வில்லையா; நண்பர்களுடன் பே ச வி ல் ைல யா? வம்பளக்க வில்லையா? அதே மாதிரியானதுதான் சபையிலே பேசுவதும். உங்களுக்குப் பேசுகிற ச க் தி நி ைற ய இருக்கிறது. அந்தச் சக்தியைச் சரியான வழியிலே திருப்ப வேண்டும். அவ்வளவுதான். அ த ற் கு ஏ ற் ற வழி எங்களுக்குத் தெரியும்.

இந்த மாதிரி யாவர்க்கும் அபயப்பிரதானம் செய்யும். அத்தியாயம் அடுத்தபடி இருந்தது. -

தபாலிலே என்ன சொல்லிக் கொடுக்க முடியுமென்று. யோசிக்காதீர்கள். இப்போது த ப ல் மூ ல ம் நடக்காத காரியம் என்ன இ ரு க் கி ற து? வீணாக வேலையையும் காலத்தையும் அெடுத்துக் கொண்டு ப டி ப் ப தி ல் லாபம் இல்லை. எங்களிடம் நேரே கற்றுக் கொள்பவர்களைவிடத். தபால் மூலம் க ற் று க் கொள்பவர்களே அதிக பல ைன அடைவார்கள்.’’ - . N.

இங்ங்ணம் தற்புகழ்ச்சிப் பட ல ம் அடுத்தபடி வந்தது. எல்லாம் படித்துப் பார்த்தேன். "நாமும் பேச்சு வன்மை:ை