பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்லும் பொருளும் செல்லாப் பொருளும் உலகில் பொருள் பெறுவது எளிது. உயர் குணங்கள் நிரம்பிய வனிடத்திலும் பொருள் இருக்கிறது. தவறான காரியங்கள் செய் கின்றவனிடத்திலும் பொருள் இருக்கிறது. ஆகவே பொருளைப் பெறுவது கடினம் அல்ல. ஆனால் அதைக் கொடுப்பது அருமை. கொடுப்பதிலும் தன்னை மறந்து கொடுப்பது மிகமிக அருமை. ஈதலின் நோக்கமே ஆசைகளை அழிப்பதுதான். ஆதலால் புகழாசையை அந்த ஈகை உண்டாக்கக் கூடாது. பொருளால் அருள் சிலருக்கு எத்தனை முயன்றும் பொருள் கிடைப்பதில்லை. ஆனால் சிலருக்கு மிகுதியான பொருளைக் கொடுத்திருக்கிறான் இறைவன். எதற்காக? "இரப்பவர்க்கு ஈயவைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்" என அப்பர் சுவாமிகள் சொல்கிறார். மக்களுக்கு அருள் புரிவதற் காக இறைவன் அவர்களிடம் மிகுதியான பணத்தைக் கொடுக் கிறான். அந்தப் பணத்தின் மேல் அவர்கள் ஆசை வைக்காமல், அதைக் கொடுத்தவன் இறைவன் என எண்ணி, இரப்பவர்களுக்கு எல்லாம் தம்மிடம் இருப்பதை இல்லையென்று ஒளிக்காது ஈந்தால் அவர்களுக்கு இறைவன் அருளைக் கொடுக்கிறான். 'கரப்பவர் தங்கட் கெல்;லாம்கடுநர கங்கள் வைத்தார்.” தம்மிடம் பொருள் இருந்தும், இரப்போர்க்குக் கொடுக்காமல், இல்லை எனச் சொல்லி மறைத்து வைத்துக் கொள்கிறவர்களுக்குக் கடுமையான நரகத்தை வைத்திருக்கிறானாம். நம்மிடம் பொருள் மிகுதியாக இருந்தால், இறைவன் அருள் பெற மிகுதியான வாய்ப்பு இருக்கிறது என்று கொள்ள வேண்டும். அருள் வருகின்ற வாய், பொருள் என்ற கார்க்கினால் அடைபட்டிருக்கிறது. புட்டிக் குள் இருக்கும் பொருள் வேண்டுமென்றால் மேலே மூடி யிருக்கிற கார்க்கை எடுத்து எறிய வேண்டும். அந்தக் கார்க்கை எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தால், உள்ளே இருக்கிற பொருளை நுகர முடியுமா? அருள் வருகின்ற வாயை அடைத்துக் கொண்டிருக்கும் பொருளை இரப்போர்க்கு எல்லாம் இல்லை யென்னாது கொடுத்தால் ஆண்டவன் அருள் வரும். அந்தப் பொருளைத் தன்னுடையது என்று வைத்துக் கொண்டால் அருள் வராது. 9i