பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 "தோடுடைய செவியன் விடையேறியோர் துவெண் மதிசூடிக் காடுடைய சுடலைப்பொடி பூசிஎன் உள்ளங் கவர்கள்வன்; ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள் செய்த பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனன்றே" என்பது அவர் பாட்டு. ஆண்டவன் தம் அநுபவத்திற்கு உள்ளாகி, அண்மையில் இருப்பதனாலே, "இவன்” என்று சொன்னார். இப்படி இறைவன் சிலருடைய உள்ளத்திற்கு அநுபவப் பொருளாக இருக்கும்போது, நம் போன்றவர்களுக்கு அநுபவத் திற்கு எட்டாத பொருளாக நெடுந்துரத்தில் இருக்கிறான். அருகில் வருபவர்களையே அறிந்து கொள்ளாதவர்கள் நாம் அல்லவா? பக்கத்து அறையில் தம் பிள்ளை இருப்பது தெரியாத ஒருவர், அவன் வெகு தூரத்தில் தோட்டத்தில் இருப்பதாக எண்ணி, 'ஏ சுப்பிரமணியா!' எனக் கத்திக் கூப்பிடுகிறார். அவர் கூப்பிடும் சத்தமே சுப்பிரமணியம் பக்கத்தில் இல்லை, தூரத்தில் இருக் கிறான் என்று அவர் எண்ணியிருப்பதைக் காட்டும். அண்மையில் இருந்தும் அதை அறியவில்லை. அருகில் இருப்பது தெரிந்தால் அப்படிக் கூப்பிட மாட்டார். கடவுளை நாம் அப்படித்தான் அழைத்துப் புலம்புகிறோம். நமக்குள்ளே இருக்கும் பொருளை அவனது அருளொளிதான் காட்டமுடியும். அந்த அருளொளியை உடைய செழுஞ்சுடர் திருச்செங்கோட்டின் மேலே இருக்கிறது. தெய்வத் திருமலைச் செங்கோட்டில் - வாழும் செழுஞ்சுடரே! மலையின் மேல் உள்ள சுடரை நினைப்பது மலையின் மேல் விளக்கிடும் அருணையில் ஞானம் பெற்ற அருணகிரியாருக்கு ாளிதல்லவா? செங்கோட்டின் பெருமை செங்கோடு என்றால் செங்குத்தான மலை என்று பொருள். பற்ற மலைகளில் ஏறுவது போலத் திருச்செங்கோட்டு மலை † BG