பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 இரகசியத்தை அவர் காதில் மட்டும் கேட்கும்படி சொன்னார். அதை, கின்னம் குறித்து அடியேன் செவி நீ அன்று கேட்கச் சொன்ன குன்னம் என்று குறிக்கிறார். கின்னம் என்பது துன்பம். நான் படுகின்ற துன்பத்தை உலகில் பலர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் என்னிடம் இரக்கம் கொண்டு அதை நீக்கும் வழியை யாரும் காட்டவில்லை. நீ என் துன்பத்தைக் கண்டாய். உன் திருவுள்ளக் குறிப்பில் அதனைப் போக்க வேண்டும் என்ற நினைவு உண்டாயிற்று. ஆகையால் நீ வந்து அடியேனுக்கு உபதேசம் செய்தாய். என் துன்பமும் கவலையும் போகும்படியாக உபதேசம் செய்தாய். என் செவி மாத்திரம் கேட்கும்படியாக அன்று ஒருநாள் அந்த இரகசியத்தைச் சொன்னாய்’ என்று அருணகிரியார் சொல்கிறார். அருணகிரியார் பல சமயங்களில் முருகனுடைய உபதேசத்தைப் பெற்றிருக்கிறார். 'நீ திருப்புகழ் பாடு' என்று முருகனே அவருக்குக் கட்டளையிட்டான்; "திருப்புகழ் விருப்பமொடு செப்பென எனக்கருள்கை மறவேனே' என்று பாடுகிறார். மந்திரம் உபதேசித்தானாம்; "உபதேச மந்திரப் பொருளாலே உனைநான் நினைந்தருட் பெறுவேனோ?” என்று ஒரிடத்தில் சொல்கிறார். இப்படியே முருகன் குருநாதனாக எழுந்தருளி உபதேசித்ததைப் புலப்படுத்தியிருக்கிறார். இந்தப் பாட்டிலும் முருகன் திருவாய் மலர்ந்தருளிய ஒன்றைப் பற்றிச் சொல்கிறார். முதலில், "என் காது மாத்திரம் கேட்கும்படியாக, என் துன்பத்தைக் களைவதற்காக, அன்று சொன்ன இரகசியம்’ என்று சொல்லிவிட்டு, "அது மலைவாணர் ஊரில் வெளியாகி விட்டது” என்கிறார். குறிச்சி என்பது மலைப் பிரதேசமாகிய குறிஞ்சி நிலத்து ஊருக்குப் பெயர். அந்தக் குறிச்சி இந்தக் குன்னத்தை (இரகசியத்தை) வெளிப்படுத்தி விட்டதாம். குன்னம் குறிச்சி வெளியாக்கி விட்டது 198