பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 ஆனால் முருகன் அந்தக் கல்யாணத்தைத்தான் விரும்பினான். வள்ளியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் என்ன? தேவ லோகத்தில் அதை நடத்தும்படி ஏற்பாடு செய்யக் கூடாதோ? அந்தக் குறவர்களோடு குறவனாய் இருந்து குதூகலம் அடைந்தான். சிறப்பான கல்யாணத்தை அவன் அநுபவத்தில் கண்டிருக் கிறான். இதற்குமுன் தேவயானையை மணம் புரிந்து கொண்ட போது இந்திரலோகமே களிக் கூத்தாடியது. கண் கொள்ளாக் காட்சி. அந்தக் கல்யாணத்தில் தேவராஜனுடைய பெண்ணைத் தன் அருகில் இருக்கச் செய்து மணந்தவனே இப்போது அந்தக் குறக் கல்யாணத்தைச் செய்து கொண்டான். என்ன ஆச்சரியம்! அவனுக்கு என்ன, பைத்தியமா பிடித்துவிட்டது? தேவானையை இந்திரன் வலிந்து திருமணம் செய்து கொடுத் தான். அவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி முருகன் அப் பிராட்டியை மணந்தான். இங்கே எத்தனை இடையூறுகள் எத்தனை ஏச்சுப் பேச்சுகள் அவ்வளவையும் பொறுத்துக் கொண்டான். தானே வலியச் சென்று தன் நிலையைக் குறைத்துக் கொண்டு குறவருக்கு ஏற்ற குறவனாக நின்றான். மாமுனிவருக்கு உறவாகிய ஞானமூர்த்தி கொலை வேடனாக வந்தான். என்றும் இளைய னாகிய அவன் கிழவனாக வந்தான். கற்பகதரு நீழலில் வாழும் வாழ்வை இந்திரனுக்கு அருளிய வள்ளல் வேங்கை மரமாக நின்றான். வேட வேடம் போட்டுப் பல்லைக் காட்டினான்; வேங்கை மரமாகப் பிரமித்து நின்றான்; அவள் காதலால் கூனிக் குறுகிக் கிழவனாக வந்தான். என்ன வேற்றுமை! இங்கே எத்தனைக்கு எத்தனை குறைபாடும் தாழ்வும் உள்ளனவோ, அத்தனைக்கு அத்தனை முருகன் காதலும் மகிழ்ச்சி யும் மீதுார நின்றான். அவன் நினைத்திருந்தால் இந்தக் குறிச்சி யையே அமராவதி நகரம் போல ஆக்கியிருக்கலாம். பூதகணங் களை அழைத்து ஏவினால் இரவோடு இரவாகக் காட்டையெல்லாம் அழித்து அற்புதமான திருமண மண்டபத்தை அமைத்திருக்கும். குறவாணர் குன்றில் குறவாணர் கல்யாண மாகவே இருக்க வேண்டுமென்று அவுன் விரும்பினான். ஏழை வீட்டுக்குச் செல்வரான விருந்தாளி ஒருவர் வருகிறார். அவர் மிகவும் நல்லவர். வந்தவுடன், "எனக்காக ஒன்றும் அதிக மாகச் செய்ய வேண்டாம். நீங்கள் எதைச் சாப்பிடுகிறீர்களோ, அதைப் 204