பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணும் வேலும் பழைய காலத்துக் கதைகளில் ஒரு செய்தி வரும். அசுரர் களோடு போராடும்போது அவர்களை எந்த எந்த வகையில் கொன்றாலும் சாகாமல் திரும்பத் திரும்பப் பல வித உருவங் களை எடுத்துக் கொண்டே இருப்பார்களாம். அவர்களுடைய உயிர்நிலை இருக்கும் இடம் எது என்று அறிந்து அங்கே தாக்கிக் கொல்வார்களாம். அதேபோல இந்தக் கண் என்ற படை யாருடைய மனம் பலவீனமாக இருக்கிறது என்று பார்த்துப் போய்த் தாக்குகிறது. தாக்கும்போது அவர்களுடைய புறக்கோலத்தைக் கண்டு அஞ்சாமல் தாக்குகிறது. விசுவாமித்திரர் கதை விசுவாமித்திரருடைய தவவேடத்தைக் கண்டு மேனகை அஞ்சவில்லை. குலத்திற்குப் பழக்கமான தொழில் அந்தக் குலத்தில் வந்தவர்களுக்கு அருமையாக இராது. இயற்கையாகவே குலத் தொழிலைச் செய்யும் ஆற்றல் அவர்களிடத்தில் உண்டாகி விடும். வேறொரு குலத் தொழிலைச் செய்ய வேண்டுமென்றால் மிகுதியாக உழைத்துப் பயில வேண்டும். கற்றுவிட்டால் பரம்பரை பரம்பரையாக அந்தத் தொழிலைச் செய்பவர்களைக் காட்டிலும் மிகத் திறமையாகச் செய்வார்கள். rத்திரிய குலத்தில் பிறந்தவர் விசுவாமித்திரர்; கெளசிகன் என்ற பெயரோடு பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட சக்கரவர்த்தி. வாளெடுத்துப் போர் செய்யும் மரபில் உதித்த அவருக்கு, காட்டில் போய் உட்கார்ந்து கொண்டு தவம் செய்யும் ஆற்றல் இயல்பிலே உண்டாகாது. நாட்டைத் துறந்து, அரசாட்சியைத் துறந்து, அரசனுக்குரிய இன்பத்தைத் துறந்து, வனவிலங்குகளிடையே உறைந்து கடுமை யான தவம் செய்தவர் விசுவாமித்திரர். தவம் செய்ய வேண்டு மென்ற எண்ணம் அவருக்கு உண்டானது எப்படித் தெரியுமா? ஒருநாள் தன் பெரும்படைகளுடன் கெளசிக அரசன் காட்டுக்குப் போனான். அங்கே வசிஷ்டர் தவம் செய்து கொண் டிருந்தார். அரசன் தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வருகிறான் என்று உணர்ந்தவுடன் வசிஷ்டர் மரியாதையுடன் வரவேற்று அவனுக்கும் அவனுடைய பரிவாரங்களுக்கும் விருந்து அளிக்க நினைத்தார். தம் கருத்தை மன்னனிடம் தெரிவித்தார். 357