பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணும் வேலும் ஏமாற்றத்தால் கெளசிக மன்னன் கண்கள் சிவந்து விட்டன. "அடே தாடி வைத்துக் கொண்டிருக்கும் இந்த முனிவனுக்கு இவ்வளவு அகந்தையா? அந்த மாட்டைத் தானே பிடித்து என்னிடம் கொடுக்க வேண்டியது இருக்க, என்னைப் பிடித்துக் கொண்டு போ என்று சொல்லி எனக்குத் தோல்வியை உண்டு பண்ணிவிட்டு இவன் உட்கார்ந்து தவம் செய்வதா? இவனையே என் படைப்பலம் கொண்டு அடித்துக் கொல்கிறேன் பார் என்று பெரும்படையுடன் வசிஷ்டருடைய ஆசிரமத்தைத் தாக்க ஆரம்பித்தான். வசிஷ்டர் புன்னகை புரிந்தார். தம்முடைய கையில் இருந்த தண்டத்தைத் தமக்கு முன்னால் ஊன்றி அப்படியே உட்கார்ந்தார். எத்தனை எத்தனையோ விதமாகக் கெளசிகன் போரிட்டான். அவனுடைய படைகளை எல்லாம் வசிஷ்டருக்கு முன்னால் இருந்த தண்டம் விழுங்கிவிட்டது. : .. அப்போது நினைத்தான் கெளசிகன்: 'சீ சீ என்னுடைய உடல் பலத்தினால் பயன் இல்லை. என்னிட முள்ள பெரிய படைப்பலத்தினாலும் பயன் இல்லை. பெரிய நாட்டுக்கு நான் அரசனாக இருப்பதனாலும் பயன் இல்லை. என்னிடம் இருக்கும் செல்வத்தில் அணுவளவுகூட இல்லாத இந்த முனிவர் அவ்வளவு செல்வமும் தோற்றுப் போகும்படி செய்துவிட்டாரே! என் படைகள் எல்லாம் பயன் இல்லாமல் போகும்படியாகச் செய்ய இவரிடம் இருக்கும் படை ஒன்றே ஒன்றுதான். அது இவருடைய தவம். அந்தத் தவத்தை நான் இனிச் செய்வேன். எனக்கு நாடு வேண்டாம்; அரண்மனை வேண்டாம்; பெண்டு பிள்ளைகள் வேண்டாம்; மந்திரிகள் வேண்டாம்; படை வீரர்கள் வேண்டாம். இந்தக் கணமே எல்லாவற்றையும் துறந்துவிட்டு வசிஷ்டரைப் போலக் காட்டுக்குச் சென்று தவவலிமை உடையவன் ஆவேன்' என்று உறுதி பூண்டு எல்லாவற்றையும் துறந்து காட்டிற்கு ஓடிவந்தான் கெளசிக மன்னன். தன் குலத்திற்கு இயல்பல்லாத தவத் தொழிலை மேற்கொண்டு முனிவன் ஆனான். அவனுடைய திறமை எவ்வளவு சிறப்பானதாக இருக்கவேண்டும் அவனே விசுவாமித்திர முனிவர். . . . . . . . . . . . ; மிகக் கடுமையாகத் தவம் செய்யலானார் விசுவாமித்திர முனிவர். அந்தத் துறவியின் தவத்தைக் கண்டு இந்திரனே க.சொ.1 –24 - 359